பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு விற்பனைச் சங்கங்களும் தொழிலுற்பத்திச் சங்கங்களும், பண்டக சாலைகளும், வீடுகள் கட்டும் சங்கங்களும் மிகுந்த முன்னேற்றமடைந்து பெருகி யுள்ளன. பாசன வசதிகள் இந்தியாவின் பிரசினைகள் என்னவென்ருல், எத் தனையோ விஷயங்களைச் சொல்லலாம். ஆயினும் தண்ணிர்தான் நம் நாட்டின் முதன்மையான பிரசினை. கனிகளில் வெட்டி யெடுப்பது கட்டித் தங்கம், தண் ணர் என்பது திரவத் தங்கம். நிலங்களுக்கு ஆறுகளி லிருந்தும், பூமிக்கு அடியிலிருந்தும் எவ்வளவு தண் ணிர் கிடைக்கின்றதோ அந்த அளவுக்கு விவசாயம் பெருக்கமடையும். இந்த வகையில் இரண்டாவது திட்ட இறுதியில் 180 லட்சம் ஏக்கர் நிலங்களுக்குக் கூடுதலான பாசன வசதி அளிக்கப் பெற்றுள்ளது. விவசாயத்திற்கும் தண்ணீர் இன்றி யமையாதது . தொழில்களுக்குப் பயன்படும் மின்சார உற்பத்திக்கும் தண்ணிர் அவசியம். புதிதாய்க் கட்டிய அணைகளின் மூலம் இந்த இரண்டு வசதிகளும் பெருகியுள்ளன. ஆறுகளில் ஒடிய தண்ணிரில் 100க்கு 17 பகுதிதான் 1951 வரை பயன்படுத்தப் பெற்று வந்தது. 10 ஆண்டுகளுக்குப் பின் 27% பயன்படுத்தப் பெறுகின் றது. இதல்ை 700 லட்சம் ஏக்கர்களுக்குப் பாசன வசதி ஏற்பட்டிருக்கிறது. மின்சார உற்பத்தி == ... 1950-51-இல் 23 லட்சம் சிலோவாட்டுக்ளாக இருந்த மின்சார உற்பத்தி 57 லட்சமாகக் கூடி யுள்ளது. * இருபதாயிரத்திற்கு மேற்பட்ட ஜனத் தொகை யுள்ள ந்கரங்களுக்கெல்லாம் முதல் திட்டத்திலேயே இ. சி. பா-18 a 2.73