பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/294

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மின்சார நிலையங்களும், சுமார் 1,725 மைல்களுக்கு மின்சார சக்தியைப்பிரித்துவிநியோகித்தலும், துர்க்கா பூரிலும் ஒர் அணை அமைத்து, 1,500 மைல் நீளத்திற் குக் கால்வாய்கள் வெட்டுதலும் டி. வி. கார்ப்ப ரேஷன் மேற்கொண்டுள்ள வேலைகள். சுருங்கச் சொன் ஞல், வெள்ளப் பாதுகாப்புடன், சுமார் 5 லட்சம் கிலோவாட்ஸ் மின்சார உற்பத்தியும், 10 லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியும் அதன் பொறுப் பில் உள்ன்ன. சில சமயங்களில் தாமோதர் நதியின் வெள்ளப் பெருக்கால் ரூ. 70-80 கோடி நஷ்டம் ஏற்படுவதுண்டு. நான்கு அணைகளையும் கட்டுவதற்குச் செலவு ரூ. 50 கோடிக்கு மேற் போகவில்லை. எனவே பல வருடங் களில் பல கோடி ரூபாய்ச் சேதம் ஏற்படுவதை இந்த அணைகள் தடுத்துவிட்டதே நாட்டுக்கு முதலாவது பெரிய ஆதாயம். மண் ணு லு ம் காங்கிரீட்டாலும் அமைந்துள்ள 160 அடி உயரமுள்ள கோனர் அணை 1955-இல் முடிந்து விட்டது. இதன் உத்தேசச் செலவு ரூ. 98 கோடி. இதில் தேங்கியுள்ள தண்ணிர் பொகாரோ அனல் மின் நிலையத்திற்கு உபயோகமாவதோடு, 1,04, 000 ஏக்கர் பாசனத்திற்கும் பயன்படும். திலையா அணை 1952 இறுதியில் முற்றுப் பெற்றது. இது 1,200 அடி நீளமும் 99 அடி உயரமுமுள்ள முழு காங்கிரீட் அணை. உத் தேசச் செலவு ரூ. 3,59,00,000. 162 அடி உயரமுள்ள மெய்தோன் அணை 1188 அடி நீளம் காங்கிரீட்டும், 12,030 அடி மண்ணும் கொண்டு அமைந்தது. உத் தேசச் செலவு ரூ.16,40,00,000. இதல்ை 2,70,000 ஏக்கர்களுக்கு நீர் கிடைக்கும்; 60,000 கி. வா. மின் சார் சக்தியும் உற்பத்தியாகும். பஞ்செட் குன்று அணையும் 1959-இல் பூர்த்தியாயிற்று. இது 134 அடி 2 & 4