பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிற்சாலையைப்போல் புதிதாக ரூ. 2,88,00,000 செலவில் கூடுதலான தொழிற்சாலை ஒன்றும் கட்டப் பெற்றுள்ளது. இந்தத் தொகை கம்பெனியின் சொந்த இருப்பிலிருந்தே செலவிடப்பட்டுள்ளது. ஜப்பானிய நிபுணர்களின் ஒத்துழைப்புடன் கைக்கடிகாரங்கள் செய்யவும் ஏற்பாடாகி வருகின்றது. உ ற் பத் தி தொடங்கி, நல்ல முறையில் வேலை நடந்து வந்தால், வருடத்திற்கு 8 லட்சம் கடிகாரங்கள் உற்பத்தி செய்ய முடியும். இந்தக் கம்பெனி வெற்றிகரமாக நடப்பதால் இது போல் நாட்டின் வேறிடங்களில் இன்னும் இரண்டு கம்பெனிகள் அமைக்க அரசாங்கம் ஆலோசித்து வரு கின்றது. ஹிந்துஸ்தான் ஏர்கிராப்ட் தொழிற்சாலை பங்களுரி லுள்ள இத்தொழிற்சாலை விமானங்கள், ரயில் கோச்சு கள், மற்றும் பாதுகாப்பு இலாகாவுக்குத் தேவையான பல பொருள்களை உற்பத்தி செய்கின்றது. இதன் பங்கு களில் பகுதி மத்திய அரசாங்கத்தினுடையது : எஞ்சிய பகுதி மைசூர் அரசாங்கத்தினுடையது. மத்திய அரசாங்கப் பாதுகாப்பு இலாகாவே இதை ந ட த் தி வருகின்றது. 1959-60 வரை இ தி ல் ரூ. 14,20,00,000 முதலீடு செய்யப்பெற்றுள்ளது. நமது ஏர் இந்தியா இண்டர் நேஷனல் கம்பெனி யின் 6 பெரிய போயிங் விமானங்களும் பல நாடு களைத் தாண்டி டோக்கியோ, ஸிட்னி, நியூயார்க், மாஸ்கோ நகரங்களுக்கெல்லாம் போய் வருகின்றன. எல்லா ராஜ்யங்களிலும் விமானம் ஒட்டுதலும் பழக்க மாகி வருகிறது. விமானம் ஒட்டும் பைலட்டுகள் ' பெருகி வருகின்றனர். ஆனல் அதிக விமானங்களே தேவை. போருக்குரிய பாம்பர் என்ற வெடி குண்டு 2.99