பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/312

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிபுணர்கள் இதற்கு ஆலோசனை கூறியும், இந்தியர் களுக்குத் தொழிற் பயிற்சி யளித்தும் வருவதற்கு ஒப்பந்தம் செய்யப் பெற்றுள்ளது. இமாசலப் பிர தேசத்திலுள்ள கஹான் என்ற இடத்தில் கலப்பைகள், தண்ணிர் பம்புகள் முதலிய விவசாயக் கருவிகளும், மாவரைக்கும் இயந்திரங்கள் முதலியவைகளும் உற் பத்தி செய்யப்படுகின்றன. மலேரியா ஒழிப்புக்காக உபயோகமாகும் டி. டி. டி. பொடி ஒரு தொழிற் சாலேயில் தயாராகின்றது. கூடுதலாக ஒன்று கட்டி முடிக்கவும் ஏற்பாடு நடக்கின்றது. பெனிஸிலின் உற்பத்திக்காக ரூ. 4 கோடி மூலதன அளவுள்ள கம் பெனி புனவுக்கு அருகிலுள்ள பிம்ப்ரியில் நடந்து வரு கின்றது. அரசாங்கத்திற்குச் சொந்தமான 11 நிலக் கரிச் சுரங்கங்களில் வேலை நடத்தவும், மேற்கொண்டு தேவையான சுரங்கங்களை வாங்கி நிலக்கரி உற்பத்தி யைப் பெருக்கவும் தேசிய நிலக்கரி அபிவிருத்திக் கார்ப்ப ரேஷன் (என். வி. டி. ஸி.) வேலை செய்து வருகின்றது. ஒரிஸா ராஜ்யத்தில் இரும்புக் கனிகளை வெட்டி யெடுக்கவும், ராஜஸ்தான் ஏரிகளில் உப்பு எடுக்கவும், அஸ்ஸாமில் மண்ணெண்ணெய் எடுக்கவும் தனித் கம் பெனிகள் அமைந்திருக்கின்றன. வெளி நாட்டு வர்த்தகத்தில் ஏற்றுமதி இறக்கு மதியைக் கவனித்து நடத்துவதற்காக ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஒன்றும் நிறுவப் பெற்றிருக்கின்றது. அரசாங்க இலாகாக்களால் நடைபெறும் தொழில்கள் பாதுகாப்புத் தளவாடங்கள், வெடிமருந்து முதலி யவைகளை உற்பத்தி செய்ய நாட்டின் பல பகுதிகளில் 20 தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. ரூ. 950 கோடி மூலதனத்துடனும் மொத்தம் 35, 000 மைல் ரயில்பாதைகளுடனும், இந்தியன் 3.02