பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


எல்லையாகும். இந்தப் பகுதியிலும், இதற்கு அடுத்துள்ள நம் வடகிழக்கு எல்லைப் பிரதேசத்திலும் எல்லைகள் அமைந்திருப்பது சர்வதேச முறைகளின்படி உள்ளவை. அவை இயற்கையான நதி நீர்ப்பிரிவுக் கோட்டை அதுசரித்துச் செல்லுகின்றன. நதிப் படுகைகளின் நடுவே நதிகளின் போக்கை அனுசரித்து இரு பக்கத்து நாடுகளும் எல்லையமைத்துக் கொள்வதே தொன்று தொட்டு நடந்து வரும் முறை. மலே முகடுகளிலும், சாதாரணச் சமவெளிகளிலும் அமைக்கும் எல்லைகளிலே சந்தேகம் நேர்ந்தாலும், நதிப் படுகைகளிடையே அமைக்கும் எல்லைகள் ஐயப்பாட்டிற்கே இடமில்லாதவை.

நடுப்பகுதியில் திபேத்தை ஒட்டியிருக்கும் நம் இராஜ்யங்களில் உத்தரப் பிரதேச எல்லை, ஒருபுறம் சட்லெஜ் நதிக்கும், மற்றெரரு புறம் கங்கை ஆற்றுக்கும் இடையிலுள்ள திட்டுக்களைத் தழுவிச் செல்லுகின்றது. இமாசலப் பிரதேசத்தின் எல்லை சட்லெஜ் நதியின் கிழக்கிலும் மேற்கிலும் பாய்ந்து கொண்டிருக்கும் கிளை நதிகளின் நீர்ப்பிரிவுப் போக்கைத் தழுவிச் செல்லுகின்றது ; பஞ்சாபின் எல்லை பாராசு, ஸ்பிதா நதி தீரங்களைப் பிரித்து நிற்கும் பெரிய மேட்டு நிலத்தை ஒட்டிச் செல்லுகின்றது.

இந்த மத்தியப் பகுதியில் இந்திய எல்லைக்குட்பட்ட நதித்திட்டுக்களிலுள்ள நெலாங்ஜடங், பாரா ஹோத்தி, லாப்தால், சாங்சாமல்லா என்ற பிரதேசங்கள் திபேத்து நாட்டைச் சேர்ந்தவையென்று சீன சர்க்கார் உரிமை கொண்டாடுகின்றது. நெலாங் ஜடங் 700 சதுர மைல் பரப்புள்ளது. பாராஹோத்தி ஒன்றரைச் சதுர மைல் அளவுள்ள பிரதேசம். லாப்தால், சாங்சாமல்லா இரண்டும் உத்தரப் பிரதேசத்தில் அல் மோரா ஜில்லாவிலுள்ளவை.

28