பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/325

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டிருக்கின்றன. கரும்பு உற்பத்தியில் 10 லட்சம் டன் அதிகரிக்க ஏ ற்பா டு செய்யப்பட் டிருக்கின்றது. தென்னே, அரக்குப் பற்றும் மரங்கள், வாழை முதலி யவைகள் அதிக இடங்களில் வைத்து உண்டாக்கப் பெறுகின்றன. வேளாண்மைக் கல்வி பெருகுவதற்கா கக் கோவை வேளாண்மைக் கல்லூரியை விரிவாக்கி, அதிக மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள வசதி செய் யப் பெற்றிருக்கின்றது. மாடுகள், ஆடுகள் முதலான விலங்குச் செல்வங்களின் வளர்ப்புக்காக இரண்டாவது திட்டத்தில் ரூ. 2, 16, 18,000 ஒதுக்கப்பட்டது. முக் கியமான இடங்களில் விலங்குப்பண்ணைகளும், கோழிப் பண்ணைகளும், பால் பண்ணைகளும் அமைக்கப்பெற் றுள்ளன. மின்விசை உற்பத்தி நிலையங்கள் : மின்சார நிலையங் களில் சென்னை நகரில் விஸ்தரிக்கப்பெற்றுள்ள அனல் மின் நிலையமும், குந்தா அணைத் திட்டத்தின் மூலம் அமைந்துள்ள நீர் மின் நிலையமும், பெரியாறு அணை மூலம் அமைந்த நீர் மின் நிலையமும் குறிப்பிடத்தக் கவை. சென்னை நிலையத் திட்டத்திற்குச் செலவு ரூ. 9; கோடி. 15,000 கிலோ வாட்டுகள் உற்பத்தி செய்யும் இரண்டு இயந்திரங்கள் முதல் திட்டக் காலத்திலேயே இணைக்கப்பட்டன. பின்னர் 30,000 கிலோ வாட்டுகள் உற்பத்தி செய்யும் இயந்திரம் பொருத்தப்பட்டு, 1958 முதல் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் நடை பெறும் குந்தா திட்டத்தில் அவலாஞ்சு அணை, எமரால்டு அணை, மேல் பவானி அணை, குந்தா பாலம் அணை ஆகிய நான்கு அணைகளிலும் கட்ட்ட வேலைகள் தீவிர மாக நடைபெறுகின்றன. மேல் பவானி அணையி லிருந்து அவலாஞ்சு அணைக்கும், குந்தா பாலம் அணையி லிருந்து நீர்ச் சுழல் தேக்கம் வரைக்கும் மலையைக் 3.15