பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/359

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஸ்குவாட்ரன்கள் : ஹெலிகாப்டர்கள் 30: அக்கினிக் குண்டுகள் உள்ளிட்ட பலரக வெடிகுண்டுகள். அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து ஆயுத உதவி கள் கிடைத்திராவிட்டால் பாகிஸ்தான் படையெடுத் திருக்க முடியாது. ஆனல் இந்தியாவுடன் போரா டவா அமெரிக்கா ஆயுத உதவி செய்தது? இல்லை. கம்யூனிஸ்ட் சீனவை எதிர்ப்பதற்காகவும், கம்யூ னிஸம் பரவாமல் தடுக்கவுமே உதவி செய்யப்பெற் றது. பாகிஸ்தான், ஆயுதங்களைத் தந்திரமாகப் பெற் றுக்கொண்ட பின்பு, சீனவுடன் உறவுகொண்டு, இரக சிய உடன்படிக்கைகளும் செய்து கொண்டிருக்கின் றது. சீனவுடன் சேர்ந்தே அது இந்தியாமீது போர் தொடுக்க ஏற்பாடு செய்தது. அமெரிக்கா ஆயுதங் களை அளிப்பதுபற்றி 1954 முதலே நாம் ஆட்சேபித்து வந்ததில், அவைகள் இந்தியாவுக்கு எதிராக உபயோ கிக்கப்படமாட்டா என்று அது உறுதியளித்தது. ஆனல் 1965 போரில் அந்த உறுதி மொழியை அமெ ரிக்கா காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. பாகிஸ்தா னுக்கு உறுதிமொழி, உடன்படிக்கை யெல்லாம் வெறும் கழிவுக் காகிதங்களே, படையெடுப்பின் பலன்கள் சாம்ப் பகுதியில் நம் படையினர் பெரும் போர் செய்தனர். அங்கு மட்டும் எதிர்த்துக் கொண்டிரா மல், நம் இராணுவம் மேற்குப் பாகிஸ்தானுக்குள்ளும் நுழைந்து, சியால்கோட், லாகூர் பகுதிகளில் கடும் தாக்குதல்களை நடத்தி வந்தது. மொத்தம் 22 நாட் கள் போர் நடந்தது. ஐ. நா. பாதுகாப்புக் கவுன்சி லின் தலையீட்டின் பேரில் செப்டம்பர் 23-ந் தேதி போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்தப் போரில் நம் 34.9