பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/361

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிரதேசங்களை நம் படையினர் மீட்டுக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த யுத்தத்திலிருந்து பாகிஸ்தான் இந்திய ராணுவத்தின் வல்லமையை நன்ருகத் தெரிந்து கொண்டுவிட்டது. ஆயினும் பாகிஸ்தானஇப்பொழுது ஆள்பவர்கள் உள்நாட்டிலும், அமெரிக்க ஐ. நா. மன்றத்திலும் மேலும் போர்புரியப் போவதாகப் பிதற்றி வருகிருர்கள். மந்திரி பூட்டோ காஷ்மீருக் காக 1,000 ஆண்டுகள் வேண்டுமாயினும் போரிடத் தயாரென்று கர்ச்சனை செய்து வருகிருர், போரில் தோற்ருேடியவர்கள் இப்படி யெல்லாம் ஏன் பேசு கிருர்கள் ? ஏனென்ருல், அவர்கள் இத்தகைய பேச் சுக்களால்தான் பாகிஸ்தானி மக்களை ஏமாற்றி அடக்கி வைக்க முடியும். அயூப்கான் ஆட்சியில் மக்களின் அவதிகள் பல. நாட்டின் முன்னேற்றத்திற்கான வேலை களில் ஈடுபடாமல், அயூப் கூட்டத்தினர் இந்தியாமீது பாய்ந்து வெற்றிக் கொடி நாட்டி மக்களை மயக்கி வைக்க எண்ணினர்கள். ஆயுதங்களையும், வீரத்தை யும், மானத்தையும் களத்திலே இழந்த பின்னும், அவர்கள் மீசையை முறுக்கிக் கொக்கரித்துக் கொண் டிருந்தால்தான் மக்கள் இன்னும் சிறிது காலம் ஏமாந் திருப்பார்கள். இறுதி முயற்சிகள் போரிலே வெற்றிபெருத பாகிஸ்தான் அரசியலில் சூதாடி வெற்றிபெறலாம் என்று கருதுகின்றது. தன்னிடம் நட்புக் கொண்டுள்ள அமெரிக்காவையும், பிரிட்டனையும் தூண்டி, அது காஷ்மீர் சம்பந்தமாகத் தான் ஏதாவது வெற்றி பெற்றதாகக் காட்டிக் கொள்ள விரும்புகின்றது. வல்லரசாகிய அமெரிக் காவும், பல்லிழந்த கிழவி போன்ற பிரிட்டனும் 35 I