பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/368

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தானம் நிலைத்திருக்கும் என்று கனவு காண இயலாது. தாங்க முடியாத வேதனையினலோ, ஆத்திரத்தி ேைலா, வேறு வழியின்றியோ ஒரு கூட்டம் அவைகளை உபயோகித்தால், சில நிமிட நேரத்தில் எதிர்க் கூட்ட மும் அவைகளைப் பயன்படுத்தும் என்பதில் சந்தேக மில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, போதிய கார ணங்கள் இல்லாமலே, அவைகள் தவறுதலாகவும் உப யோகமாகி விடக்கூடும். அணு ஆயுதங்களையும், மற் றப் போர்க் கருவிகளையும் ஒழிப்பதற்குப் பல நாடு களும் சம்மதித்து, தத்தம் படைகளையும் கலைத்துவிட முன் வந்தால்தான், உலக அமைதி நிலைபெறும். உள் நாட்டு அமைதிக்கு வேண்டிய பாதுகாப்பைத் தவிர, வெளி நாடுகளிடையே அமைதியைக் காக்கச் சர்வ தேசப் போலீஸ் படை ஒன்றே போதும் என்பது அறிஞர்களின் கருத்து. இக் கருத்து எப்பொழுது நிறைவேறும் என்பதை எவரும் யூகித்துச் சொல்ல இயலவில்லை. ஆனல் மனித சமூகம் வாழ்வதற்கு இதைத் தவிர வேறு வழியுமில்லை. அணு ஆயுதங்களும் மாமூலான போர்க் கருவிகளும் இந்த நிலையில் நம் பாரத நாட்டின் பாதுகாப் பைப் பற்றிக் கவனிப்போம். இக் காலத்தில் தற்காப் புக்குத் தேவை யென்று கருதக்கூடிய அமிசங்களிலே பலவும் இங்கே இருக்கின்றன. பல அரங்கங்களிலே நின்று போராடவும், படைகள் சுற்றி வளையவந்து வெவ்வேறு முனைகளில் தாக்கவும், சில பகுதிகள் எதிரி வசமானலும், மற்றப் பகுதிகளில் வல்லமையைப் பெருக்கிக்கொள்ளவும் விசாலமான பெரிய நாடுகளே தற்காப்புக்கு ஏற்றவை. இந்தியா அத்தகைய நாடு. படைகள் நிறுவவும், எந்த நிலையிலும் அவைகளுக்குத் தேவையான பொருள்களை அனுப்பிக் கொண்டிருக்க & J &