பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/369

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வும், நாட்டினுள்ளே ஆங்காங்கு பாதுகாப்பு அணிகள் வகுத்து நெடுநாள் தாக்குப்பிடிக்கவும் மக்கள் தொகை யும் அதிகமா யிருக்கவேண்டும். அதிலும் இந்தியாவில் குறைவில்லை. மற்றும் இக்காலத்துப் போரில், பெரிய கனரகத் தொழில்கள், மக்களுடைய உபயோகத்திற். கான பொருள்களை உற்பத்தி செய்து குவிக்கக்கூடிய ஆலேத் தொழில்கள் முதலியவை பெருகிய நாடே நீடித்து நின்று வெற்றிபெற முடியும். நம் நாடு இந்த வழியிலும் வேகமாக முன்னேறி வருகின்றது. நம் நாட்டிற்குத் தேவையான படைகள், கருவிகள், தள வாடங்கள், விமானங்கள், போர்க் கப்பல்கள், பாது காப்பு அமைப்புக்கள், தளவாட உற்பத்திக்குரிய புதிய தொழிற்சாலைகள் ஆகியவை பற்றி யெல்லாம் பெரிய நிபுணர்களே ஆராய்ந்து கூற முடியும். அத்தகைய ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. அமெரிக்கா, பிரிட் டன் ஆகிய நாடுகளிலிருந்து இராணுவக் குழுக்கள் வந்து பார்த்துச் சென்றுள்ளன. நம் நிபுணர்களும் அவைகளுடன் கலந்து விரைவிலே முடிவு செய்து வரு கிரு.ர்கள். ஆனல் பொது மக்கள் தெரிந்துகொண்டு சிந்திக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை மட்டும் இங்கே குறிப்பிடுதல் அவசியம். நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் நம்முடைய உண்மையான நிலைமை என்ன ? நம்மிடம் அணு ஆயு தங்களில்லை. பிறர் கொடுத்தால் சிலவற்றை வாங் கிக்கொள்ளலாம் என்பதைத் தவிர, வேறு எளி தான வழி எதுவுமில்லை. தற்காலப் போருக்கு அணு ஆயுதங்கள் இன்றியமையாதவையா என்ருல், இல்லை யெனலாம். அணு ஆயுதங்கள் எதிரிகளுக்குப் பெரிய எச்சரிக்கையாகப் பயன்படுகின்றனவே யன்றி அவைக ளால் மட்டுமே போரில் வெற்றி தோல்விகளைத் தீர் மானிக்க முடியாது. முடியுமானல், பெரிய வல்லரசு 359