பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 யைச் சர்வதேச நீதித்தலத்தின் முடிவுக்கு விடலாம் என்று கூறியிருக்கிருர், நீதித்தலத்தில் வழக்காடா விட்டால், சில நாடுகளின் மத்தியஸ்தத்தை இரு கட்சிகளும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்க வேண்டும். எந்த இடத்தில் விவாதிப்பதாயினும், உரிமை கொண்டாடும் விஷயத்தில் ஒரளவாவது நியாயம் இருக்க வேண்டும். சரித்திரம், உடன்படிக் கைகள், தஸ்தாவேஜுகள்,பழைய பூகோளப்படங்கள், மாமூலான வழக்கம், விவகாரம் தோன்றிய காலத்தில் சம்பந்தப்பட்ட பிரதேசங்கள் எவருடைய ஆதிக்கியத் திலுள்ளன என்பது போன்ற பல விஷயங்களையும் பரிசீலனை செய்துதான் எவரும் முடிவு செய்ய முடியும்.

ஆனால் சர்வதேசச் சட்டப்படி இந்திய-சீன எல்லையைப் பற்றிச் சீன விவகாரத்தைக் கிளப்புவதற்கே உரிமை கிடையாது. எந்த எல்லையை ஆட்சேபிப்பதற்கும் குறிப்பிட்ட ஒரு காலமும் சந்தர்ப்பமும் உண்டு. ஒரு நாடு பல்லாண்டுகளாக வாய் மூடி மெளனமாயிருந்து விட்டு, திடீரென்று ஒரு சமயத்தில், எல்லைப் பிரசினையைக் கிளப்ப முடியாது. முன்னால் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது சீன எல்லைப் பிரசினைகளே ஏன் எழுப்பவில்லை என்பதற்குச் சீனப் பிரதமர் சூ என்-லாய் அப்பொழுது ‘காலம் கனிந்திருக்க வில்லை’ என்று கூறிய மறுமொழி முன்பு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு மந்திரி உடனுக்குடன் ஆட்சேபம் தெரிவிக்காமல், காலம் கனியும் வரை காத்திருந்தால் அவருடைய விவகாரமே செல்லத் தக்கதன்று.

சமீபத்தில் கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் ஒரு பிரதேச சம்பந்தமாக ஏற்பட்ட விவகாரத்தில், சர்வதேச நீதித்தலம் இவ்வாறே தீர்ப்புக் கூறியுள்ளது. 1962, ஜூன் 15-ந்தேதி கூறப்பெற்ற அந்தத்

37