பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 1957 முதல் நமது நேபா பகுதியில் சீனரின் ஊடுருவல் நடந்து வந்தது. அவ்வாண்டு, அக்டோபர் மாதம் சினப் படையில் ஒரு பிரிவினர் லோஹித் டிவிஷனில் வாலாங் நகருக்குள் புகுந்தனர். அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் மற்றாெரு பிரிவினர் அதே டிவிஷன் வழியாக பர்மாவுக்குச் சென்றனர். 1959இல் ஆயுதம் தாங்கிய சீனக் காவற்படை ஒன்று காமெங் டிவிஷனில் கின்ஸிமானே என்ற இடத்தில் புகுந்து நமது காவற் படையைப் பின்னல் தள்ளியதும், பெரிய படை ஒன்று சுபன்ஸிரி டிவிஷனில் லாங்ஜூவிலிருந்த நமது சிறு காவற்படை மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, காவல் நிலையத்தைக் கைப்பற்றிக் கொண்டதும் முக்கிய நிகழ்ச்சிகள். 1960 முதல் 1962, செப்டம்பர் வரை தக்த்லாங் கோம்பா ராய் என்ற கிராமம் முதலிய வேறு சில இடங்களிலும் ஊடுருவல் செய்தும், நம் காவல் நிலையங்களைத் தாக்கியும் சீனர் தொந்தரவு கொடுத்து வந்தனர். இந்த அக்கிரமங்களைப் பற்றி இந்திய அரசாங்கம் அவ்வப்போது சீன சர்க்காருக்கு ஆட்சேபங்களை அனுப்பி வந்துள்ளது.

சர்வதேச ஒழுங்குமுறை

இந்திய நாட்டின் வட பகுதியில் மேற்கே லடாக்கிலும், மத்தியில் இமாசலப் பிரதேசம்-பீஹார்பஞ்சாப்பிலும், கிழக்கில் நேபாவிலும் 50-ஆயிரம் சதுர மைல்களுக்கு மேற்பட்ட நிலங்களின் மீது சீன உரிமை கொண்டாடுவதும், அவற்றில் பல பகுதிகளேத் தன் வசப்படுத்திக் கொண்டிருப்பதும் சர்வதேசச் சட்டப்படி எவ்வளவு அக்கிரமமானவை என்பது சர்வதேச நீதித் தலத்தின் தீர்ப்புக்களை ஆராய்ந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும். அதனால்தான் இந்தியப் பிரதம மந்திரி சீன இந்திய எல்லைப் பிரசினை

36