பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இமயமால்வரையும் இந்திய எல்லைகளும் உலகத்திலேயே உயர்ந்த மலைகளின் உறைபனி நிறைந்த கணவாய்களிலும் கொடுமுடிகளிலும் சுதந் தர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் அரசியல் போராட்டம் வலுத்து வருகின்றது. சாதாரண மொழியில் அது எல்லைப் போராட்டம் : ஆழ்ந்து பார்த்தால் அது உலக ஆதிக்கியத்திற்கான நீண்ட காலப் போராட்டமேயாகும்.” -ஜான் :பிரேஸர் இந்தியாவின் எழில்முடி இமயமால்வரை : திருவடி கன்னியாகுமரி. தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து 1,700 மைல் துரத்திலுள்ளது இமயம். உலகின் மலையரசாக விளங்கும் இம்மலைத் தொடர் மேற்கிலிருந்து கிழக்கே 1,500 மைல் நீளம் பரவியுள்ளது. ஒன்றன்பின் ஒன்ருக அடுக்கடுக்காக விளங்கும் மலைகளின் குறுக்களவு 200 மைல்கள். மலே களின் சிகரங்கள் பல ஐந்து மைலுக்கு மேல் உயரமுள் ளவை. 24,000 அடிகளுக்கும் மேலாக உயர்ந்துள்ள சிகரங்கள் 163 இருப்பதாகக் கணக்கெடுத் திருக்கிருர் கள். இயற்கையில் தானகவே எழுந்து நிற்கும் இமய மால் வரை பல்லாயிரம் ஆண்டுகளாக வடதிசையில் நம் பாரத நாட்டின் பாதுகாப்புக் கோட்ட்ையாக அமைந்துள்ளது.