பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுசக்திகள் அடங்கிவிட்டன. கட்சிகள் யாவும் கை கோத்துக்கொண்டு ஒத்துழைக்க முன்வந்தன. வெளி நாடுகளிலிருந்து ஆயுத உதவிகள் வந்து குவிந்தன. மக்கள் பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்கினர். என்று மில்லாத ஊக்கமும், உள்வலியும் பெருகின. ஆகவே சீனர்கள் படையெடுத்து வந்த 1962, அக்டோபர் 20-ந் தேதி நம் வரலாற்றிலே மிக முக்கியமான நாளாகும். சீனா அழிவுப் பாதையில் குதித்த அந்த நாள்தான் வெற்றிப் பாதையில் நம்மைத் துாக்கி நிறுத்திய நன்னாள். நாம் சுதந்தரமடைந்த நாளுக்கு அடுத்த படியாக அதுவே முக்கியமானது. வெறும் தொழிற் பெருக்கத்தையே நாடிக் கொண்டிருந்த நம்மை, ஒரு கையில் துப்பாக்கியையும் ஏந்திக்கொண்டே வேலை பார்க்கும்படி செய்த நாள் அந்த நாள் தான் !

84