பக்கம்:இந்தியா எங்கே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்தியா எங்கே?



மனித சுதந்திரம்!

பஞ்சம், பசி, பட்டினி, பிணி, பிச்சைக்காரன், சோம்பேறித்தனம், வேலையில்லாத தொண்டிச் சமுதாயம் இவைகள் இல்லாத ஒரு புதுவுலகத்தைப் படைக்கத்தான் சோஷலிஸ இலட்சியம் தேவை என்று போராடினோம். அத்தகைய ஒரு இலட்சிய புது உலகத்தில் நாமும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே பாரத சுதந்திரத்தைப் பெற்றோம். இந்த தேசத்தின் தலைவிதியை மாற்றி அமைக்க முயன்றோம். துரதிர்ஷ்டவசமாக அரசியல் சண்டையில் இலட்சியத்தை மறந்த நமது தீய அரசியல்வாதிகளால் நாடு காடாகி வருகிறது!

"அவர்களே இன்று, தேசத்தைப் பாதுகாக்க வாருங்கள் ஆபத்து” என்கிறார்கள், ஆம்! உண்மை! நியாயமான எச்சரிக்கை! தேவையான காலத்தில் செய்யப்படுகிறது. உங்கள் குரலில் உள்ள ஆழ்ந்த பொருள் எமக்குப் புரிகிறது. நீங்கள் சுட்டிக்காட்டும் தேசீய விபத்தினை நாங்கள் அறிகிறோம். நீங்கள் சொல்வதை நூற்றுக்கு நூறு அப்படியே நம்புகிறோம். நீங்கள் என்னை நம்பாவிட்டாலும் நாங்கள் உங்களை நம்புகிறோம். நீங்கள் என்னை மதிக்கா விட்டாலும் நாங்கள் உங்களை மதிக்கிறோம்.

உண்மை உள்ளங்களையெல்லாம் உங்கள் அலட்சியத் தால் நீங்கள் புண்படுத்தியிருந்தாலும், அதையெல்லாம் மறந்து உங்கள் பேச்சில் இருக்கும் காலத்தின் உண்மையை உணருகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/11&oldid=983020" இலிருந்து மீள்விக்கப்பட்டது