பக்கம்:இந்தியா எங்கே.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 143

மூன்றாவது - வெற்றி உதயம்

விதி வீழ்ந்தது

கதிர் - 1

காலம் : பாதி இரவு இடம் மன்மதசகாயன் மாளிகை

(இன்பக்கொடி சுகபோக செளந்தர்யத்தின் எல்லையெனச் சொல்லத்தக்க தன் மாளிகையில் வீணை வாசித்துக் கொண்டிருக்க - வில்லி என்ற அடிமைப்பெண் பலவகை பானங்களைத் தர)

வில்லி

வில்லி

அம்மா. இந்தாருங்கள். இரவு வெகு நேரமாகி விட்டது. தங்கள் தந்தை வந்தால் என்னைத் தான் தண்டிப்பார். சீக்கிரத்தில் படுக்கைக்குச் செல்லுங்கள். நான் துரங்காமலிருப்பதற்காக நீ தண்டனை பெற வேண்டுமா? அப்படி யெல்லாம் இனி நேராது வில்லி.

எங்கேயம்மா, நீங்களும் நான் வந்த நாளாய்த் தான் இம்மாதிரி சொல்லுகிறீர்கள். ஆனால், நாங்கள் படும் தொல்லைகளுக்கு முடிவு இந்தப் பிறப்பில் இல்லை. வருந்தாதே வில்லி! நானும் உன் போல் ஒரு பெண் எதிரியின் சிரமம் தெரியாத கல் நெஞ்சம் எனக்கில்லை. விரைவில் விமோசனம் வரும். உட்கார்.

ஐயோ. அம்மா. நானா உட்காருவது? -

உட்காரேன் இழுத்து உட்கார வைத்து வில்லி அவர் சுகமா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/145&oldid=537709" இலிருந்து மீள்விக்கப்பட்டது