பக்கம்:இந்தியா எங்கே.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.டி. சுந்தரம்

13




இந்த லட்சணத்தில்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முப்பதாண்டு விழாவும் கொண்டாடி விட்டோம்.

இப்போது நடக்கும் சில பெரியவர்களின் பிறந்த தின விழாக்களைப் போல், அவ்வளவு ஆடம்பரமாக இல்லா விட்டாலும் ஏதோ பாவம் சுதந்திர விழா ஆயிற்றே என்று உலகத்துக்காக பயந்து ஏதோ வேண்டா வெறுப்பாக கொஞ்சம் சுமாராக நடத்தினோம்.

விடுதலை வந்து ஒரு தலைமுறை கழிந்துவிட்டது. இந்த நாடு. தன் விதியைத்தானே வகுத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்று 30 ஆண்டுகள் ஒடி விட்டன.

இந்தியச் சுதந்திரத்தின் பலாபலன்களைப் பற்றி அறிந்து கொள்ள உலகமே ஆர்வமோடு காத்திருக்கிறது.

நம்நாட்டின் 30 ஆண்டு லாப நஷ்டக் கணக்கை உலகின்முன் படைக்க நாம் மிக மிகக் கடமைப் பட்டிருக்கிறோம். கடனும் பட்டிருக்கிறோம். அப்படி நாம் இந்த உலகுக்குச் சமர்ப்பிக்கப் போகும் லாப நட்டக் கணக்கு, புத்திசாலிகள் எழுதிய லாபக் கணக்காக இருக்குமா? அல்லது புதிய வியாபாரி தீட்டிய லாபமும் இல்லாத நட்டமும் இல்லாத நடுநிலைக் கணக்காக அமையுமா? அல்லது லஞ்ச ஊழல் நிறைந்தவர்கள் எழுதிய தணிக்கை செய்ய முடியாத அளவு தவறுதல் நிறைந்த கள்ளக் கணக்காக இருக்குமா? என்பது பற்றி உலகந்தான் கணித்துச் சொல்ல வேண்டும்.

உலகம் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டும். நம் மனச்சான்று நம்மைப் பார்த்து. பின்வரும் கேள்விகளை கேட்டவண்ணம் இருக்கும்.

‘ஏ! மனிதா! நீயும் மனித உருவுடன் திரிகிறாய். விடுதலை வீரன் என்று பெருமை பேசிக் கொள்கிறாய். விடுதலையால் வரும் நல்ல பலன்களை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/15&oldid=1025900" இலிருந்து மீள்விக்கப்பட்டது