பக்கம்:இந்தியா எங்கே.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

Ꭵ Ꮭa6üᎢ

இன்ப

நம் தாய்

கதிர் - 10

(தனிப்பேச்சு) ஆம்! என் மகளே! எனக்கு விரோதியாயிருக்கிறாள். மன்னன் இன்ப சகாயனும் எனது பிற்கால திட்டத்தை நன்கறிந்து கொண்டே குடும்ப சம்பந்தம் செய்து கொள்ள முட்டுக்கட்டை போடுகிறான். இளவரசன் ஒரு அடிமைப் பெண்ணிற்குப் பிறந்த பிள்ளை என்ற இரகசியத்தை நானும் அரசனும் மட்டுமே அறிவோம். இதை மற்ற பிரபுக்களுக்குப் பகிரங்கப்படுத்தாமல் நயமாகவே காரியத்தைச் சாதித்து சிம்மாசனத்தில் அமர நான் செய்த சூழ்ச்சி பலிக்கவில்லை. எனக்கும் ஒரு ஆண் சந்ததி இருந்தால், இப்பயல் ஞானதேவனை பழம் செருப்பாக்கிப் பிய்த்தெறிந்திருப்பேன். ஏன், சத்ததியைப் பெறுவது என்னால் இயலாத காரியமா என்ன? ஆம். நான் ஏலமெடுத்த அடிமைப் பெண் வேல்விழியே இந்தப் புதுத் திட்டத்தைச் செயலாக்க ஏற்றதொரு இன்பக் கருவியாகக் கொள்வேன். ஆகா, அவள் அழ என்னை ஆகர்ஷித்து விட்டது. -

திருப்புக் காட்சி

(தனிப்பேச்சு) மடையன் மன்மதசகாயன் பெருநோய்க் கிருமியை விட மோசமாக என்னை அரித்துக் கொண்டே இருக்கிறான். என் பதவியைக் கொத்தப் பார்க்கும் அவன் ஒரு பழைய மலைக் கழுகு அரசியல் குழப்பத்தை விளைவித்து, அதிகாரத்தைப் பறிக்க விரும்பும் கிழட்டுப் பெருநரி, எப்பொழுதோ அவனை நம்பி மதுப் போதையாயிருந்தபோது, சொல்லிவிட்ட உருவ மற்ற இரகசியத்தை வெளியாக்கும் பயமுறுத்த லையே ஆயுதமாகக் கொண்டு என்னை வீழ்த்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/178&oldid=537744" இலிருந்து மீள்விக்கப்பட்டது