பக்கம்:இந்தியா எங்கே.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் i.75

ஞான

வில்லி

ஞான

வில்லி

ஞான

வில்லி

ஞான

கதிர் - 9

(அடிமைப்பெண் வில்லியிடம்) சகோதரி சுரங்கத்திலே அவஸ்தைப்படும் என் நண்பர் வானழகர் கூறிய புனிதத்தாய் இவர் களாகத்தான் இருக்கவேண்டும். இவர்களை யாரென்று யாராவது கேட்டால், என் நந்த வனத்தை வளர்க்கும் அடிமை என்று நீ கூறிவிடு. அவர்களைப் பசி தீர்த்துப் பாதுகாப்பது உன் பொறுப்பு. மன நிலை கலைந்து சிதறி அலை யாடுகிறது. பாவம் வானழகரின் தாயாகத் தானி ருக்கவேண்டும். ஆனால் அவர் அடையாளம் கூறிய மற்றொரு வாலிபப் பெண்ணைத் தான் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் களை அழைத்துப் போ. இளவரசே! அந்தப் பெண்ணையும் நான் கண்டு பிடித்துவிட்டேன். யாரவள்? எங்கிருக்கிறாள்? அப்பெண் தான் மன்மத சகாயரின் மாளிகையில் பிடிபட்டுள்ள பேசும் பதுமை. பெயர் வேல் விழியாம். அப் பெண்தானா? ஆகா! முத்து மாலை சொத்தைப் பன்றியின் கூட்டிலா இருப்பது? அது பொருத்தமற்ற செயல். வில்லி! உன் உதவியால் அம் மாலையைப் பொருத்தமான வீர மார்பில் சூட்ட முடியுமென்று எண்ணுகிறேன். இளவரசே! இது நான் அன்றே செய்து விட்ட தவம். ஆகட்டும். அத் தாயைப் பத்திரமாகக் காப்பாற்று.

(553 # pಲ್ಲಣ್ಣ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/177&oldid=537743" இலிருந்து மீள்விக்கப்பட்டது