பக்கம்:இந்தியா எங்கே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இந்தியா எங்கே?



அவர் பொறுமையையும் சோதித்துவிட்டான். "கடைசி பாரதப் போர்” என்று முழக்கமிட்டார். “ஏகாதிபத்தியமே வெளியே போ!' என்று அவனுக்கும், ‘இந்தியனே செய், அல்லது செத்து மடி!’ என்று நமக்கும் கட்டளை பிறப்பித்தார்.

இச்சமயத்தில் தூரக் கிழக்கிலிருந்து தலைவர் நேதாஜி “சகோதரர்களே, அண்ணல் ஆணையை உடனே நிறைவேற்றுங்கள். இதோ நானும் வருகிறேன். டில்லி சலோ!” என்று சங்கநாதம் செய்தார். பம்பாயில் கடற்கரை புரட்சிக்கனலைக் கக்கி எழுந்தது.

நல்ல நாள் வந்தது

சிறையிலிருந்த நம் தலைவர்கள் வெள்ளையன் வெளியே போக நல்ல ஒரு நாள் குறித்துத் தந்தனர். அந்த நாள் வந்தது. 1947 ஆகஸ்ட் 15, கோட்டையிலே விடுதலைக் கொடி பறந்தது. கப்பல் ஏறியது வெள்ளையாட்சி. கைப்பற்றினோம் ஆட்சி பீடம். வியாபாரியாக வந்தவன் ‘வீரனாக’ வெளியேறினான். என்றென்றும் நாம் வியாபாரிகளிடம் வெகு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு வெள்ளையாட்சி ஓர் எடுத்துக்காட்டு போகும் போது கூட இந்த நாட்டின் எதிர்காலத்துக்கு ஒரு எச்சரிக்கையாக, பாரத நாட்டை இரண்டு நாடுகளாக்கி விட்டுச் சென்றான். இந்தப் பாடத்தையும் நாம் மனத்தில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளையர் சென்ற பிறகும் இங்கு பல புத்திசாலிகள் பேசிக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.

அதாவது வெள்ளையன்தான் கருணை கூர்ந்து, கஷ்டப்பட்டு இந்த நாட்டை ஒன்று படுத்தினானாம். இதை எப்படி, யார் நம்புவது? பாவம், அவன் எப்போது ஒன்று படுத்தினான்?

ஐநூறுக்கு மேற்பட்ட ராஜாக்களுக்குக் கொள்ளையில் பங்கு கொடுத்து, தனித்தனியாகத் தானே தயவாகத்தானே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/24&oldid=1349322" இலிருந்து மீள்விக்கப்பட்டது