பக்கம்:இந்தியா எங்கே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இந்தியா எங்கே?


மட்டும் ஆட்சி, அரசியல், மொழி, மற்றெதுவும் குறுக்கிடா மல் நம்மை நாமே கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

நாட்டின் ஒற்றுமைக்கு மாறாக தலையெடுக்கும் தீய சக்தி, நாட்டை மாற்றானுக்குக் காட்டிக் கொடுககும் நயவஞ்சகம், என எண்ணி அவ்வஞ்சத்தை வேரறுக்க வேண்டும்!

எந்த வட்டாரத்திலிருந்து பிரிவினை வந்தாலும், அதை அந்நியர் படையெடுப்பைப் போலவே, எண்ணி எதிர்க்க வேண்டும்.

இந்தக் கடமையுணர்ச்சியை நமக்கு நினைவு படுத்தும் தியாக ஜோதிகளுக்கு நமது பணிவான அஞ்சலியைச் செலுத்து வோமாக.

அஞ்சலி செலுத்துவதோடு, நமது தெளிந்த அறிவிலே ஒரு மாறாத சுதேச வைராக்கியமும் நாட்டுப்பற்றும் வளர வேண்டும். உலகம் நம்மை மதிப்போடு பார்க்க வேண்டும்.

உண்மையின் இதயம்!

ஆம், இன்று ஆசியாவின் இதயமாக இருக்கும் இந்தப் புனித நாடு, நாளை உலகத்தின் இதயமாகவும் மாறலாம். அது நமது நடத்தையைப் பொறுத்திருக்கிறது. நமது நாட்டுப் பற்றினையும் நாணயத்தையும் மனிதாபிமானத்தை யும் உலக உறவையும் பொறுத்துத்தான் நமது மதிப்பு உயரும். அந்த உயர்வுக்கு உரியபடி நமது மனமும் செயலும் இயங்குமாக

“யாதும் ஊரே யாவரும், கேளிர்” என்று ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு உள்ளுக்குள்ளே சில்லரைச் சண்டை போடக் கூடாது. திருக்குறளைப் பற்றி தினசரி பேசிவிட்டு திருட்டுக் காரியங்களைச் செய்யக் கூடாது. பகவத் கீதையை பாராயணம் செய்துவிட்டு பேடிப் பயல்களாய் இருட்டிலே ஒடிப் பதுங்கக் கூடாது. புற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/28&oldid=1401720" இலிருந்து மீள்விக்கப்பட்டது