பக்கம்:இந்தியா எங்கே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம்

29


தனிப்பெருமை இலக்கணம், கல்விக்கடலின் கரைகண்டவன், கீதைக்குப் புதிய உரை தந்தவன், தேசமும், தெய்வமும் ஒரே பொருள்தான் என்ற தெளிவைக் காட்டியவன். - -

தன் ஆருயிர் நீப்பினும் அதர்மத்தைக் கண்டு அஞ்சாத ஆண்சிங்கம்தான் தள்ளாத வயதில் தாய்த் திருநாட்டில் அடிமை விலங்கறுக்க பல ஆண்டுகள் கடுங்காவல், தண்டனை பெற்றவன், நாடு கடத்தப்பட்டவன் மராட்டிய மாநிலம் தந்த மாபெரும் தியாகமூர்த்தி லோகமான்ய பாலகங்காதர திலகன், தன் இறுதி மூச்சுவரை “சுதந்திரம் நமது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்” என்று கர்ஜித்தானே, அது எதற்கு? இன்று நாம் காணும் தரங்கெட்ட வாழ்வின் திறங்கெட்ட சமுதாயத்தைக் காண்பதற்காகவா?

செக்கிழுத்த செம்மலும், சிங்கத் தலைவன் சிவாவும்!

எந்தவொரு எதிர்ச் சக்தியையும் எரிக்கும் கதிர்ச் சக்தியாக விளங்கிய எழில்மிக்க வீரம், கட்டுறுதி உள்ள உடல், கருணை மிக்க நல்லமனம், கண்ணிலே புதிய ஒளி காரியத்தில் வைராக்கியம், பரம்பரையின் பெரிய குணம் ஆயிரக் கணக்கான சுற்றத்தார், அரசபோகம், ஆங்கிலேயர் களும் ஆஞ்சும் அரசியற்புலமை. பணமழை பொழியும் வக்கீல் தொழில், பாசமிக்க குடும்பம், ஆசைத்துணைவி, பூசனைக்குரிய பெற்றோர், பேசற்கரிய பெரியோர், உயிரினும் இனிய நண்பர், உற்றார், உறவினர், தமிழின் புதிய ஜீவன் எனக் கருதப்பட்ட தனதரும் நண்பன் மகாகவி பாரதி, ஆகிய இத்தனைச் செல்வங்களையும் பெற்ற மேலோன்! தன் நாட்டின் விடுதலைப் போரில் ஈடுபட்டுக் கப்பலோட்டிய தமிழன், கன்னித் தமிழ்க் காவலன். தொழிலாளர்களின் துணைவன், வந்தவர்க்கெல்லாம் வரையாது கொடுத்த வள்ளல், உண்மையின் இமயம், உணர்ச்சியின் எரிமலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/31&oldid=1401723" இலிருந்து மீள்விக்கப்பட்டது