பக்கம்:இந்தியா எங்கே.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இந்தியா எங்கே?


இவன் பேரைக் கேட்ட அளவிலேயே ஆங்கிலேய ஆட்சி அஞ்சி நடு நடுங்கும் ஆற்றல் மிக்கவன், தென் பாண்டிய நாட்டில் தேச பக்தியை வெள்ளம்போல் பாய்ச்சிய தளபதி தேசபக்தர் சிதம்பரனார்.

தனது நண்பர் சிவாவுடன் இரு ஜென்ம தண்டனை பெற்று. கடுங்காவற் சிறையிலே. கொடுமையை அனுபவித்து. கல்லுடைத்து. செக்கிழுத்து. புழுக்கள் நெளியும் களியைத் தின்ன முடியாத நிலையில், பல நாட்களைத் தனிமையில் கழித்து, தன் உயிர் குன்றிய போதும், உரம் குன்றாத தலைவனாக, தன்மானத்தின் குன்றாக, “சுதந்திரம் சுதந்திரம்” என்ற வீர முழக்கம் செய்து வெற்றிப்பறை முரசாற்றினானே. எங்கள் கொற்றவன் சிதம்பரம் எதற்காக? குற்றுயிர்ப் பிணம் போல் சாவதா? பிழைப்பதா? என்ற சந்தேகத்தில் இன்று ஊசலாடுகிறதே. இந்த சுதந்திரத்தைக் கானவா எங்கள் வ.உ.சி. செக்கிழுத் தான்? சீரழிந்தான், செத்தொழிந்தான்? சொல்லடா தம்பி சொல் இந்தக் கேடு கெட்ட சுதந்திரத்திற்காகவா கோடி கோடி வீரர்கள் பாடுபட்டார்கள்? சொல் தம்பி!

கொடி காத்த குமரன்

உயிர் போகும்வரை, "நாடு நாடு சுதந்திரம் சுதந்திரம்” என்று கதறினானே கொடி காத்த குமரன் அவனென்ன பைத்தியக்காரனா, பணக்காரனா, பதவி பித்தனா, வாழத் தெரியாதவனா? இல்லை. நல்ல வாலிபன்! உன்னையும் என்னையும் போல வாழ வேண்டியவன், வாழத் தெரிந்தவன், எழில் ததும்பும் செல்வியை மனைவியாகப் பெற்றவன்! இதயத்திலே ஆசைக் கனவுகளை வளர்த்துக் கொண்டவன், எதற்காக தாயின் மணிக் கொடியை ஏந்தினான்? தெருவிலே பவனி வந்தான்? வந்தே மாதரம் என்றான்? மண்டை ஒடு பல சுக்கலாக வெடித்து மூளைக் குள்ளே பாயும் வரை, ஒரு கூலிப் போலீஸ்காரனிடம் அடிபட்ட போதும், “வந்தே மாதரம்” என்று வாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/32&oldid=1401724" இலிருந்து மீள்விக்கப்பட்டது