பக்கம்:இந்தியா எங்கே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம்

37


இதற்காகவா இந்திய தேசீய ராணுவம்? ஓர் இமய

ரலாற்றைப் படைத்தது? சே! போடா தம்பி, போ!

ன்றுமே புரியவில்லை! போக்கிரிகளின் சொர்க்கந்தானா

தப் பொல்லாத நாடு?

இந்த நாட்டில், கடவுள் கல்லாகி விட்டது அறிவாளி கோழையாகி விட்டான். வாலிபன் வலிவிழந்து விட்டான். குமரி கிழவியாகி விட்டாள். கிழவன் கிண்ணரங் கொட்டு கிறான்! குழந்தை குரூபமாகி விட்டது. கலை - கொலையாகி விட்டது. கல்வி காலியாகி விட்டது! கோடிக்கணக்கான செல்வம் பாழ்! பாழ்! இந்த நாட்டுக்குப் பயன் தர வேண்டிய பல நல்ல விஞ்ஞானிகள் - எஞ்சினியர்கள் - டாக்டர்கள் அரசியல் தொல்லை தாங்காமல் அயல் நாடுகளுக்கே சென்று விட்டார்கள்.

இந்த நாட்டில் எதுவும் நடக்கிறது! இங்கே ஒரு வினோதமான ஜனத் தொகையைப் பார்க்கிறோம். கெட்டது

வாழ்கிறது; நல்லது நடுங்குகிறது!

இங்கே பாம்புக்குப் பாலூற்றுகிறார்கள்! நாய்க்கு நகை போடுகிறார்கள். திருடனுக்கு அடி வருடுகிறார்கள். கல் நெஞ்சனும் கவி பாடுகிறான். காமுகன் கற்புக்குக் காவல்’ இருக்கிறான். இவ்வளவும் சுதந்திர நாட்டிலே நாம் காணும் அன்றாட வேடிக்கைகள்! தம்பி வேடிக்கைகள்!

இதைப் போல். சுதந்திர நாட்டின் வினோதக் கதையை வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் கேட்டுக் கொண்டே ரசிக்கலாம்; ஆனால், இப்போது நேரம் இல்லை. இன்று, ஒரு முடிவுக்கு வந்தாக

நமக்கு சுதந்திரம் வேண்டுமா? வேண்டாமா?

விேண்டுமானால், அதைக் கட்டிக் காப்பாற்ற சில கடமைகளை நாம் செய்தே ஆக வேண்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/39&oldid=1401731" இலிருந்து மீள்விக்கப்பட்டது