பக்கம்:இந்தியா எங்கே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 39

மும்முனைப் போர்!

இப்படி பெருமூச்சுவிடும் ஏர்முனையும், எரிமூச்சு விடும் போர் முனையும், ஒய்வு கொண்டு விட்டால், அதாவது வேலை நிறுத்தம் செய்துவிட்டால், செயலிழந்து விட்டால் நீயும் நானும் வாழ்வது எப்படி தம்பி? நமக்குக் கோபம் வந்தால் நம்முடைய கடமையை கீழே போட்டு விடுகிறோம்! தொழிலாளி வேலை நிறுத்தம் செய்கிறான்! ரயில் நின்று விடுகிறது. ஏரோப்பிளேன் இறங்கி விடுகிறது. பஸ் பதுங்கி விடுகிறது. இவர்களைப் பின்பற்றி ஏர் ஊழுவோன் கலப்பையைக் கீழே போட்டு விட்டால் வயல் விளையுமா? போர் வீரன் துப்பாக்கியைக் கீழே போட்டு விட்டால் படை ஜெயிக்குமா? நாடு இருக்குமா? நாம் இருப்போமா? நானுறு கட்சிகள் இருக்குமா? நாலாயிரம் ஜாதிகள் இருக்குமா? முடிவில்லாத மொழிச்சண்டை இருக்குமா? மந்திரிப் பதவி உண்டா? தேர்தல் சண்டை உண்டா? கொஞ்சும் லஞ்சம் உண்டா? கள்ள மார்க்கெட் உண்டா? நிர்வாணச் சினிமா உண்டா? நீசக்கதைகள் உண்டா? இதற்கு யார் விடை கூறுவது? எப்படி பரிகாரம் தேடுவது, சொல் தம்பி! சொல்!

நிச்சயமாக இதற்கு நீயும் நானும் விடை கூறவேண்டிய அவசியமில்லை தம்பி! காரணம் மேற்கண்ட அற்ப இன்பங்களை நீயும் நானும் அனுபவிக்கவில்லை மேற்கண்ட இன்பக் கடலிலே மன்மத விழா நடத்தும். பெரிய மனிதர்கள் - என்று அழைக்கப்படும் புத்திசாலிகளுக்கு நமது சமுதாயம் ஒரு வினாத்தாளை கொடுத்திருக்கிறது. அந்த வினாத்தாளுக்கு ஏற்ற விடைகளை, சம்பந்தப் பட்டவர்கள் - விரைவில் கொடுத்தே ஆகவேண்டும்.

கேள்விகளுக்குரிய நல்ல பதில் குறித்த நேரத்தில் கிடைக்க வில்லையானால், நம்மைப்போல். சலித்துக் கொண்டு “போங்கடா போங்க போலிகளா!” என்று இந்தப் பயல் களை வெறுத்து ஒதுக்கி விட்டு துறவியாகப் போய் விட மாட்டான். அதோ சீறிக் குமுறி நிற்கும் நம் சின்னத்தம்பி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/41&oldid=537600" இலிருந்து மீள்விக்கப்பட்டது