பக்கம்:இந்தியா எங்கே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 4了

பல்வேறுபட்ட சட்டசபைகள், நாடாளும் மன்றங்கள், குழுக்கள், துணைக் குழுக்கள் என்ற பலவிதமான குழுக்களை மழைகாலத்து ஈசல்களைப் போல் பெருக்கிக் கொண்டே இருக்கிறோமே! இது நியாயமா இதற்கு ஆகும் செலவுக்குரிய லாபம் ஏதேனும் கிடைக்கிறதா?

ஏழை இந்தியாவின் ஐந்தாண்டுக்கொருமுறை பொதுத் தேர்தல் நடக்கிறது. பஞ்சாயத்து தேர்தலிலிருந்து பாராளு மன்றம் வகையில், முதல் தேர்தல் - இடைத்தேர்தல் - கடைத்தேர்தல் என்று ஒரே தேர்தல் மயமாக இருக்கிறது. நம்மிடம் ஒரு சட்டை போட்டுக் கொண்டு வந்து ஒட்டுக் கேட்கிறார்கள். ஒட்டு வாங்கியதும் சிலர் சட்டையை மாற்றிக் கொள்கிறார்கள். ஏனென்று கேட்டால் “கொள்கை மாறுவது குற்றமில்லை. எனது அறிவிலே புதிய எண்ணம் தோன்றக் கூடாதா?’ என்று நம்மையே பார்த்துக் கேட்கிறார்கள். நமக்கே புரியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு கொள்கைக்காளான் முளைக்கும். இந்த புத்திசாலியின் குப்பை மூளையில் நாம் எப்படி நம்பிக்கை வைப்பது, ஒட்டு வாங்கும்போது ஒன்று சொல்வதும் பதவி வந்தால் அதை மாற்றிக் கொள்வதும்தான். அரசியல்வாதியின் இலக்கணம் என்றால், அந்த அசந்தர்ப்பவாத அரசியல் இலக்கணத்தை இனிமேல் சகித்துக் கொள்ளமாட்டார்கள். நம் சின்னத் தம்பிகள். இனிமேல் போலி அரசியல் கட்சி வாதிகளின் பொய்மை நாடகம் பலிக்காது!

திருவிழா நாடு!

இந்த நாடு அரசியல்வாதிகளுக்கு விழா எடுக்கும் நாடாகி விட்டது! தேர்தலில் ஜெயித்ததற்காக பாராட்டு விழாவுக்கு ஒரு ஆண்டு! இடை இடையே. சின்னக் குழந்தைகள் தின்பண்டங்களுக்குச் சண்டையிட்டுக் கொள்வது போல், அடிக்கடி தங்கள் குணம், குறிக்கோள், கட்சி, தன்மை, அவ்வளவையும் மாற்றிக் கொண்டு அவதிப் படுத்தும் அநாகரிகக் கட்சித் திருவிளையாடல்கள் மீண்டும் புதுத் தேர்தல் மறுபடியும் பாராட்டு விழா வெள்ளி விழா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/49&oldid=537609" இலிருந்து மீள்விக்கப்பட்டது