பக்கம்:இந்தியா எங்கே.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - இந்தியா எங்கே?

தங்க விழா, தகர விழா, இரும்பு விழா, பிறந்த விழா, இறந்த விழா இப்படி இந்த நாடே ஒரு விழா நாடாகி விட்டதுடன், மக்களும் இந்த விழா மயக்கத்திலே எல்லா வற்றையும் மறந்து விடுகிறார்கள்! ஆளவந்த மந்திரிகளை நம்பி ஆட்சிப் பொறுப்பை தந்த இந்நாட்டு மன்னன் சோற்றுக்கே தாளம் போகிறான். எல்லாம் ஒரே ஜால்ரா மயம் அரசியலின் பரத நாட்டியப் பெருமையில், சர்வமும் ஜால்ரா மயம்! பொய்! பொய்! அரசாங்க யந்திரமும் மெதுவாக பழுதுபட்டு வெறும் தேர்தல் யந்திரமாக, விழாக் கமிட்டியாக மாறும் அபாய நிலை ஏற்படுகிறது.! இப்பேற்பட்ட தேர்தலையும் மந்திரி சபைகளையும், சட்ட மன்றங்களையும், நிர்வகிப்பதற்கு பல கோடிப் பணம் செலவாகிறது. இந்த வகையில் கடந்த முப்பதாண்டுகளிலும் செலவான தொகை குறைந்தது சுமார் ஐநூறு அறுநூறு கோடிக்கு மேல் இருக்காதா?

“இவ்வளவு தொகையைச் செலவிட்டுப் பதவியை அனுபவித்த அரசியல் வாதிகளின் அறிவிலே பிறந்த சிறந்த ஆலோசனைகள் அத்தனை கோடிக்குப் பெறுமானமுள்ளது தானா?” என்று கேட்பது இந்த நாட்டுக் குடிமகனின் உரிமைகளில் ஒன்று என்று நாம் கருதக் கூடாதா? இந்தக் கேள்விக்கு கோபம் ஒன்றைத் தவிர வேறு பதிலே கிடையாதா? இப்படியே போனால், நமக்கு பார்லிமெண்டு, அசெம்பிளி இதெல்லாம் தேவைதானா? என்று கேட்கும் காலமும் வந்து விடுமே? அதுதான் இந்திய ஜனநாயகத்தின் கடைசி கேள்வியாக இருக்கும் என்பதை ஏன் இன்னும் உணரவில்லை இவர்கள் தேர்தல் வியாபாரத்தில் தெளிந்த முதலாளிகள்தான் பதவியில் இருக்க முடியும்!

அரசியல் வியாபாரமா?

இப்படிக் கேட்டால் “ஜனநாயகத்தைக் காப்பதற்கு ஐநூறு கோடியென்ன, ஐயாயிரம் கோடி செலவழித்தாலும் நாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால், ஜனநாயகத்தில் தேர்தல் முக்கியமானது. அதற்காக எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/50&oldid=537610" இலிருந்து மீள்விக்கப்பட்டது