பக்கம்:இந்தியா எங்கே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 49

செலவானாலும், அது எத்தனை முறை நடந்தாலும் தேசத்தின் பொருளாதாரமே கெட்டுப் போனாலும் பரவாயில்லை! இத்தேர்தல் முறையை மாத்திரம் நாங்கள் கைவிட முடியாது. தேசத்திற்கழகு தேர்தல்தானே” அதைக் கைவிட்டு விட்டால் எங்கள் பிழைப்பு என்னாவது? இந்த நாட்டில் வேலையில்லாமல் திண்டாடும் ஆயிரக்கணக்கான எஞ்சினியர்களைப் போல, அரசியல் பேசத் தெரிந்த எங்களையெல்லாம் வீதியிலே அலையச் சொல்கிறீர்களா?” என்று எல்லாக் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் நம்மைக் கேட்கின்றன. அரசியலையே தங்கள் ஆயுள் தொழிலாக, அடிப்படை வியாபாரமாக வைத்து விளையாடும் இந்த ஆபத்தானவர்களுக்காக நாடே பாழாக வேண்டுமா? இந்த கேள்விக்கு நாம் பதில் சொல்லத்தான் வேண்டுமா? என்று நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே. நமது சின்னத் தம்பியின் சீறியெழும் கர்ஜனை நம் காதைத் துளைக்கிறது. ஒரு பக்கம் பார்த்தால், பாவம் அரசியலையே தொழிலாகக் கொண்டு பிழைக்கும் கட்சி தோழர்களின் பரிதாபம், மறுபுறம் பார்த்தால், படித்த படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக் காமல், தான் கட்டிய வாழ்க்கைக் கோட்டை இடிந்து நிற்பதைக் கண்டு இந்த உலகையே பொடிப் பொடியாக்கத் துடித்து நிற்கும் சின்னத் தம்பியின் சிங்கப் பார்வை

உதயமும் அஸ்தமனமும்!

இந்த இரண்டு பார்வைகளில் எதற்கு நாம் முன்னிடம் அளிப்பது? மாற்றமில்லாமல் செக்கு மாடுபோல் வாழ்ந்து கொண்டிருக்கும் கிழடு தட்டிய அரசியலுக்கா? வருங் காலத்தை எண்ணி வாழத் துடிதுடித்து நிற்கும் வாலிபப் படையின் ஆசைக் கனவுகளுக்கா?

ஒன்று, அஸ்தமனத்தின் ஒரத்திலே நின்று ஜனநாயகம் என்ற பல்லவியை ஈனஸ்வரத்திலே பாடுகிறது. மற்றொரு சக்தி, காலைக் கதிரவனின் அருணோதயத்திலே மலர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/51&oldid=537611" இலிருந்து மீள்விக்கப்பட்டது