இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66
இந்தியா எங்கே?
இந்தக் கொடிநம் இன்னுயிரின் கொடி
எந்நாளும் காப்பதுநம் கடமை
தேசத்தில் பட்டினி இல்லாமல்
தீமை வறுமைகள் கொல்லாமல் பாசமுடனே உழைத்திடுவோம் -
பாரத நாட்டினைக் காத்திடுவோம்!
சிந்தை துணிந்து எழுந்திடுவோம் -
சிங்கத் தலைவரை எண்ணிடுவோம்!
எந்தையர் நாட்டினைக் காத்திடுவோம் - வரும்
ஏழு தலைமுறை வாழ்த்திடவே