பக்கம்:இந்தியா எங்கே.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 89

இச்செல்வன் மீது மலர்களை ஒவ்வொன்றாக வீசி அர்ச்சனை புரிவதுமட்டும் தெரிகிறது. ஆள் யாரெனத் தெரியவில்லை. மீண்டும் பார்க்கிறான். மலர் மழை தொடர்கிறது. அப்பிரதேசமே எதிரொலிக்க உரத்த சிரிப்பொலியால், உள்ளத்தின் மகிழ்வை

ஒளிக்காமல் வெளிக்கொட்டி விடுகிறான்)

வான்

வேல்

வான்

வான்

வான்

அழகானமலர்களை இப்படி என்மீது வாரி இறைக்கிறாயே! வசந்தப்பூவின் வனப்பை அறிந் திருந்தால் இப்பிழையைச் செய்வாயா? அறிவற்ற காற்றே!

(உள்ளிருந்து ஆறுதலற்ற மனிதரே! அன்பு மயமான என் இளமையை இனிக்கச் செய்யும் இன்ப ஊற்றுக்கு மணமான பூவை மகிழ்வோடு

அர்ச்சனை செய்கிறேன். இதில் கூடவா

உங்களுக்குப் பொறாமை? உங்கள் அவசர புத்தி யால் எனக்கு அறிவில்லையென்ற குற்றத்தையும் சாட்டிவிட்டீரே! இதுதான் பகுத்தறிவின் எல்லைக்கோடா?

ஒகோ பேசும் பெண் காற்று என்று தெரிந்திருந் தால் பேச்சைக் கொடுத்திருக்கவே மாட்டேன். உமது ஜீவன் நிலைத்திருக்க, உயிரின் மூச்சை ஏந்தி வரும் எனக்கு அறிவில்லையென்று எப்பொழுது ஆராய்ந்தீர்? அறிவின் ஏகச்சக்ராதிபதி மனிதன் தான் எனக் கற்பிக்கும் கர்வமென்னும் கலாசாலையில்

பயின்ற தன்னலவேதம் இது.

ஆனால், உங்களுக்கு அதிபதியாரென்று கற்கும் சுயநலக்கல்லூரியில் எப்போது சேரப்போகி lர்கள்?

என் உயிர்க்கு உணவான காற்றே! அக் கலையை உன்னிடந்தான் கற்கவேண்டும். நிபந்தனையற்ற என் சரணகதியைத் தாமதமின்றி ஏற்றுக்கொள். எல்லையற்ற சக்திகொண்ட உன் கருணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/91&oldid=537653" இலிருந்து மீள்விக்கப்பட்டது