பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1
இல்லற எந்தல்

“சங்க இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமையுடையவை என்று கூறும்போது பழமையில் ஏதோ பெருமையிருப்பதாக எண்ணி, அதனைக் குறைத்துக் கூறி மகிழ்கின்ற அன்பர்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர். தமிழ் நல்கும் தேனும், பாலும் உண்டு வளரினும், அவர்களது உள்ளத்தில் தமிழ்பால் வேறுபட்டு நினைக்கும் ஒருவகை உணர்வு இருந்தே வருகிறது. அவர்கள் குருதியின் ஒவ்வொரு துளியினும் ஊறிநிற்கும் இவ்வேற்றுமை யுணர்வு நாளடைவில்தான் நீங்கும். ஏனெனில், அது அவர்கள்பால் பல்லாயிரம் ஆண்டுகளாக வேரூன்றிப் பச்சை கொண்டிருப்பது!”

“மிகப்பழமை வாய்ந்த சங்க இலக்கியம் தோன்றிய காலம், தமிழகத்துத் தமிழ் மக்களைத் தமிழ் மன்னரே, தமிழ் நெறியில், தமிழ் மொழியில் ஆட்சி புரிந்த காலம்; மக்கள், தமிழே நினைந்து, தமிழே மொழிந்து, தமிழ்ச் செயலே புரிந்த தனித்தமிழ்க் காலம்; வைதிகம், பெளத்தம், சயினம் முதலிய சமய வுணர்வுகள் பெரிதும் பரவாத காலம்; புலவர்கள் இயற்றமிழும், பாணர்கள் இசைத்தமிழும், கூத்தர்கள் நாடகத் தமிழும் பேணி வளர்க்க, முடிமன்னரும் குறுநிலத் தலைவரும், செல்வரும், அம் மூவர்க்கும் பெருங்கொடை புரிந்து, முத்தமிழ் வளர்த்த பெருமைக் காலம்; முதுபெரும் புலவர்கள் மன்னர் பேரவையில் இருந்து, அரசியற் கருத்துக்கள் அளவளாவி இருந்த அருமைக்காலம்!”

-இவ்வாறு, முப்பத்தேழு ஆண்டுகளுக்குமுன், ‘சங்க இலக்கியத் தனிச்சிறப்பு’ எனும் கட்டுரையில், முத்தமிழ் வளர்ந்த - வளர்த்த