உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

85


என்று அதியமான் நெடுமானஞ்சியின் பெருந்தன்மையைப் புகழ்ந்து பாடிய காலம் வேறு.

‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னனுக்குத்
தன்தேச மல்லாமற் சிறப்பில்லை; கற்றோர்க்கு
சென்றவிட மெல்லாம் சிறப்பு’

என்று பாடப்பட்ட காலம் வேறு.

‘வள்ளுவரைப் பற்றியும் இளங்கோவடிகள் பற்றியும் படித்த புலவர் பெருமக்களே அறிவர். ஆனால் இந்தத் தமிழ் நாட்டில் ஔவையின் நீதி வாக்கியங்களே யாவரையும் வழிப்படுத்துகின்றன. வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் 1330 குறட்பாக்களில் அடக்கினார் என்று பாராட்டப்படுகிறார். ஆனால் வீடு என்ற நான்காம் பேற்றையும் உள்ளடக்கி ஔவைப் பிராட்டி நான்கே வரிகளில், ‘ஈதலறம்; தீவினை விட்டீட்டல் பொருள்; காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்; இம்மூன்றும் விட்டதே வீடு’ என்று பாடியுள்ளார். இதனைப் பாரதியும் பாராட்டியுள்ளார். ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’ என்று புதிய விளக்கம் கொடுக்கும், இப் பெருமாட்டி, ‘பேதைமை என்பது மாதர்க்கணிகலம் என்றும், தையல் சொற்கேளேல்’ என்றும் கூறியிருப்பாரோ? அல்லது இது இடைச்செருகலோ? எவ்வாறாயினும், பாரதி புதிய ஆத்திச்சூடியில்; பழைய தையல் சொற் கேளேல், ‘(பெண்வழிச் சேரேல்) என்ற வரியை நீக்கி மாற்றி, ‘தையலை உயர்வு செய்’ என்று கூறினார்.

பொதுவாகவே, எல்லாக் குடிகளைச் சார்ந்த பெண்பாற் புலவர்களும் அக்காலத்தில், வீரம் என்பது ஆண்களுக்கே உகந்தது, ‘வீரர்’ என்பவர் ஆண் சந்ததியினரே (புறம்-279) என்ற புலவர், ஒரு முது குடி மகளின் வீரச்