பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 சிறிது கூர்மையாக ஆழ்ந்த உணர்வுடன் சில கட்டுரைகளை மேலும் எழுதத் துணிந்திருக்கிறேன்.

மனிதகுலம் தாயில்லாமல் தோன்றுவதற்கில்லை. உண்மையில் அவளே முழுமுதற் சக்தி. அவளின் அம்சமே அவன் என்றாலும் தவறில்லை. இந்நாள், உயிரியல் தொழில் நுட்பவல்லார், தம் வளர்ந்துவரும் ஆய்வின் பயனாக மனிதர் தோன்றிய தொன்மைக் காலத்தை அவர்கள் உயிரணுக்களைக் கண்டறிவதன் மூலம் கணக்கிடலாம் என்று கூறுகின்றனர். அப்படிக் கூறுகையில், எங்கே: மத்திய ஆப்பிரிக்கப் பழங்குடிப் பெண்ணிடமே அந்தத் தொன்மையைக் குறிப்பாக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. 'செல்' என்ற உயிர்த்திசு, கரு உற்பத்திக்குப் பெண்ணிடம் இருந்தே பெறப்படுகிறது. ஆணின் விந்தணுவில் 'செல்' என்ற உயிர்த்திசு கிடையாது. சினைமுட்டை, இரண்டாக நாலாகப் பிரிந்து பிரிந்து கருவாகும் விந்தை கூறப்படுகிறது. பெண்ணின் பூப்பு; மாதாந்திரக் குருதி வெளிப்பாடு எல்லாமே விந்தை நிகழ்வுகளாகக் கருதப்படும்படி ஆய்வுத் தகவல்கள் வெளியாகின்றன. கருப்பையை, எந்த நச்சும், அசுத்தமும் தாக்கியிராத தூய்மை நிலைக்குக் கொண்டு வருவதற்கே, குருதி வெளிப்பாடு நிகழ்கிறது. அதில் நச்சுக் கொல்லிக்குரிய தன்மை இருக்கிறதென்று அண்மையில் வெளிவந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

இத்தகைய அற்புதத் தாய்க்குரிய ஆற்றல்களை இயற்கை அவளுக்கு அளித்திருக்கிறது. அவள் முதல்வியாகவே திகழ்ந்தாள்: போற்றப்பட்டாள். 'சக்தி-சக்தி-அவள் ஆடும் கூத்து: அண்டசராசரங்கள் கதி தவறாமல் சுழல்கிறது' என்ற தாய் வழிபாட்டில் மக்கள் ஈடுபட்டிருந்ததும் இல்லாமலில்லை.

ஆனால் காலப்போக்கில் வாழ்வுச் சாதனங்கள் பெருகிய பிறகு, ஆண் அவளை முற்றிலுமாக அடிமை கொண்டான். தாய் முதல்வி அல்ல; தந்தைதான்... என்ற கருத்தை நிலை நிறுத்த எத்தனை கதைகள், புராணங்கள்: காவியங்கள்! படைப்புக் கடவுளாகிய ஆண், தானே இரண்டாகப் பிரிந்து ஆணும் பெண்ணுமாகி முதல் பெண்ணைப் படைத்தான் என்றும், பெண்ணின் கருப்பை தேவையில்லாமலே, ஆண் கடவுளின் உந்திக்கமலத்தில் படைப்புக்கடவுள் தோற்றினார். அல்லது நெற்றிக்கண் சுடரிலிருந்து பிள்ளைகள் பிறந்தனர் என்றெல்லாம் பல கற்பனைகளில் ஆண் கடவுள்கள், மேலாண்மையை நிலை நாட்டி வருகின்றனர். இது ஏதோ, மனங்கவர் கற்பனைகள், சுவாரசியங்கள் என்று முடிந்து விடவில்லை. பெண், இன்று தன் சொந்தப் பெண்