உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 எத்தனை என்பதை உங்கள் நண்பர்கள் மூலமாக காஞ்சி புரத்தில் இருக்கும் உங்கள் ரத்தத்தின் ரத்தங்கள் மூலமாக தயவு செய்து தெரிந்து கொள்வீர்களேயானால் அண்ணா மாவட்டம்தான் வேண்டும் என்கின்ற அந்தக் குரல்தான் இங்கே ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் உங்களைக் கேட்கிறேன். நான் மாத்திரம்தான் அண்ணா மாவட்டம் கேட் கிறேனா? நீங்கள் கேட்கிறீர்களா? இல்லையா? (கூடியிருந்த மக்கள் பெருங்கடல் 66 அண்ணா மாவட் டம் வேண்டும்" என்று முழக்கமிடுகிறது.) இந்த மாவட்டத்திற்குப் பெயர் என்ன? ('அண்ணா மாவட்டம்', 'அண்ணா மாவட்டம்' என்று பொதுமக்கள் முழக்கம்.) நம்முடைய அண்ணனைத் தந்த காஞ்சியைச் தலைநக ராகக் கொண்ட மாவட்டத்திற்குப் பெயர் என்ன? (அண்ணா மாவட்டம், அண்ணா மாவட்டம் என்று மீண்டும் முழக்கம்.) எம்.ஜி.ஆர்.அவர்களே! கேளுங்கள்! காதிருந்தால் -காது, கேட்கும் ஆற்றலை இழக்காதிருந்தால் இந்த ஒலியைக் கேளுங்கள் என்று என் அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எழுச்சிமிகுந்த மாநாட்டில் முதலில் ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஏதோ பதவிக்கு ஆசைப்பட்டு வந்தேன் என்று கருதி 'எம்.பி.' என்று யாரும் அழைக்க வேண்டாம், 'தம்பி' என்று அழைத்தால் போதும் என்று நேற்று இயக் குநர் இராசேந்தர் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.