உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

________________

13 அவர் எனக்கு மாத்திரமல்ல, நம் கழகத்திலே இருக் கின்ற தலைவர்கள், மூத்தோர்கள் அனைவருக்கும் அன்புத் தம்பி தான். அவர் நேற்று எடுத்துக் காட்டியது போல் திடீரென்று இந்த இயக்க வெளிச்சத்துக்கு வந்து விட்ட வரல்ல அவர். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். நீண்ட நெடுங் காலமாக அந்தக் குடும்பம், சுயமரியாதைக் குடும்பம். திராவிடர் இயக்கக் குடும்பம். இளம் பிராயம் முதல், திராவிடர் இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட அந்தத் தம்பிதான் சில மாதத்திற்கு முன்பு தன்னை இந்த இயக்கத்தோடு இணைத்துக் கொண்டு, கழகத்தினுடைய பணிகளை ஆற்ற முன் வந்த போது, நான் கூட முதலிலே தடுத்தேன். 'அவசரப்பட வேண்டாம். கலையுலகப் பணிகளைப் பார்த்துக் கொண்டிரு; அதற்குப் பிறகு நான் அழைக்கிறேன் வரலாம்' என்று சொல்லியும் கூட கேட்கவில்லை. வந்தார். தன்னுடைய பணிகளைத் தொடர்ந்தார். நேற்றைக்கு நம்முடைய அருமை கலைவாணருடைய திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். அரியதொரு சொற்பொழிவாற்றினார். இன்று மாலையிலே துணைவியாரோடு வந்தார். என்ன வென்று கேட்டேன். 'இன்று எங்களுக்கு மணவிழா நாள், எனவே வாழ்த்துப் பெற வந்தோம்" எனச் சொன் னார். எனவே உங்கள் வாழ்த்துக்களை எங்கள் வாழ்த்துக் களோடு இணைத்துக் கொண்டு அவர்களுக்கு வழங்கு கின்றேன்; இந்த மணவிழா நாளில்! இந்த இந்த மாநாட்டை நடத்திய நம்முடைய கழக மாவீரர்களுக்கெல்லாம் என்னுடைய இதயப் பூர்வமான