உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 நன்றியினை தெரிவித்துக் கொள்வது எனது கடமை யாகும். நம்முடைய மதுராந்தகம் ஆறுமுகம் இந்த மாவட்டத் தினுடைய செயலாளர். அண்ணாவினுடைய மொழியிலே சொல்ல வேண்டுமானால், "வெட்டி வா என்றுரைத்தால், கட்டி வரும் வீரர்" கழகத்தின் கண்மணி! எத்தனையோ இடர்ப்பாடுகள், இன்னல்கள் இவை களையெல்லாம் கழகத்திற்காக, தான் ஆற்ற வேண்டிய பணிக்காக மறந்து விட்டு, துறந்து விட்டு, எதற்கும் தயார் என்கிற அளவில் ஒரு தியாக சீலராக இந்த மாவட்டத்திலே பணியாற்றக் கூடியவர். அந்த மதுராந்தகம் ஆறுமுகத்தை வரவேற்புக் குழு தலைவராகக் கொண்டு நடைபெறுகின்ற இந்த மாநாடு இவ்வளவு நேர்மை பொருந்தியதாக, எழுச்சியும், உணர்ச்சியும் பொருந்தியதாக இருப்பதிலே வியப்பு எதுவுமில்லை. நான் இந்த மேடையைப் பார்க்கும் போது, ஒரு பளிங்கு மாளிகை கட்டுவது போல் கட்டப்பட்டிருக் கிறது. இன்று மகிழ்ச்சியாக இருக்கலாம். நாளை காலை இந்த இடத்தைப் பார்க்கும் போது வெறிச்சோடிக் கிடக்குமே, அப்படிக் காணுகின்ற நேரத்தில் மிகவேதனை ஏற்படுமே இந்த மேடையைக் கூட மிக எளிமையாக அமைத்திருக் கலாமே! என்று கூடச் சொன்னேன். ஆனால் மாநாட்டினுடைய ஊர்வலப் பகுதியானாலும், மாநாட்டுப் பந்தலானாலும், ஆங்காங்கே அமைக்கப் பட்டுள்ள பதாகைகள் ஆனாலும், தோரணவாயில்களா னாலும், நுழைவாயில்களானாலும், முகப்பு அலங்காரமானா லும் 'ஆடம்பரம் அலங்காரம்' இவைகள்தான் அவை