உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 பூவிருந்தவல்லி ராசரத்தினத்தையும் ஒப்பிட்டுப் பேசுவது வாடிக்கை. அவருடைய தோடி ராகத்திற்கு மயங்காதார் யாரு மில்லை. அதுபோலவே நம்முடைய ராசரத்தினத்துடைய கோரிக்கைகளுக்கு மயங்காதார் யாருமில்லை. இந்த மாவட்டத்திலே கழகப் பணிகளை மிக சுறு சுறுப்பாக, தன்னை இன்னமும் ஒரு வாலிபர் என்றே கருதிக் கொண்டு ஆற்றி வருவதை காணுகிற நேரத்தில் நான் மெத்தவும் மகிழ்ச்சி அடைகின்றேன். பந்தல் அமைப்புக் குழுத் தலைவர் சகோதரர் விசுவ நாதன், விளம்பரக் குழுத் தலைவர் சகோதரர் சம்பந்தன், உபசரிப்புக் குழுத்தலைவர் நண்பர் ஜி.சீனிவாசன், அலுவலக பொறுப்புக் குழுத் தலைவர்கள் கே. டி. எஸ். மணி, திருவேங்கடம், தீர்மானக் குழுத் தலைவர் தம்பி டி. கே. பொன்னுவேலு, இளைஞர் அணி தொண்டர் படைத்தலைவர்கள் தம்பிகள் கும்மிடிப்பூண்டி வேணு, சி. வி. எம்.ஏ. பொன்முடி, மகளிர் அணி தொண்டர் படைத் தலைவராக திருமதி சாந்தா விசுவநாதன், ஊர்வல அலங்காரக் குழுத் தலைவராக மு. க. கோவிந்தராசனும் ஆற்றியுள்ள பணிகளுக்கும் தொண்டர் படையினர் எறும்புகளைப் போல் சுறுசுறுப்பாக பணியாற்றி மிகக் கண்டிப்போடு 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' காட்டுகிற வகையில் ஆற்றியுள்ள பணியையும் நான் நினைத்து நினைத்து மகிழ்கிறேன். • சிறப்பு பெற்ற இந்த மாநாட்டில் நேற்றும் இன்றும் நம்முடைய கழகத்தின் உடன்பிறப்புக்கள், முன்னணித் தலைவர்கள், வீறுகொள் சொற்பொழிவாளர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆற்றியுள்ள உரைகளும், பொதுச் செயலாளரும், பொருளாளரும், துணைப் பொதுச்செயலாளரும், ஆற்றியுள்ள உரைகளும்,