உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

17 நம்முடைய மாநாட்டுத்தலைவர் நேற்றைக்கு எடுத்து வைத்த வாதங்களும், திறப்பாளர் தம்பி விடுதலை விரும்பி எடுத்து வைத்த நியாயங்களும் இந்த மாநாட்டில் கூடி யிருக்கின்ற உங்கள் அனைவருடைய நெஞ்சங்களிலும் பதிந்திருக்கின்றன. இன்று நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? நம்முடைய பணி என்ன என்பதைத் தான் அவர்கள் எடுத்துரைத்தார்கள். அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்க வேண்டிய காலக் கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த காஞ்சிபுரத்திலே மாநாடு நடைபெறுகின்றது என்று எண்ணும் போது, யார் இந்த ஒலிபெருக்கி முன் நின்று பேசத் தொடங்கினாலும் அண்ணனை நினைத்து, கண்கலங்க நின்று, தழுதழுத்தக் குரலில், அண்ணன் இல்லையே! அண்ணன் இல்லையே!" என்கிற ஆதங்கத் தோடுதான் பேச்சைத் தொடங்குகிறோம். 66 மன்னையினால் பேசவே முடியவில்லை. ஆகவே நீண்ட நேரம் பேசாமல் தனது பேச்சை முடித்தார். பேராசிரியர் அண்ணாவோடு அந்தக் கால நினைவுகளை அவருடைய பேச்சிலே அரை மணி நேரத்திற்கு மேலாக இங்கே எடுத்துக் காட்டினார். 1942 ஆம் ஆண்டுதான் அருமை அண்ணனை நான் திருவாரூரிலே சந்தித்தேன். பள்ளிக்கூடத்து இளைஞனாக, அதே நேரத்தில் முரசொலி என்கின்ற துண்டறிக்கை வெளியிடுகின்ற பருவத்தினனாக 'சேரன்' என்கிற புனைபெயரிலே, அந்த துண்டறிக்கையை வெளியிடுகின்ற பணியினை புரிந்தவனாக இருந்த பொழுது; பொழுது; அப்பொழுதுதான் அண்ணா, திராவிடநாடு இதழைத் தொடங்குகிறார்.