உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 இரண்டாவது இதழில் நான் ஒரு கட்டுரை தீட்டி அனுப்புகிறேன். கட்டுரைக்கு தலைப்பு 'இளமைப்பலி' என்பதாகும். 'வருமா? வராதா?' என்ற ஐயப்பாட்டோடு இரண் டாவது கிழமை வருகின்ற திராவிட நாடு இதழில் 'இளமைப்பலி' என்கின்ற கட்டுரை வந்தது. ஒரு பத்திரிகையா வாங்குவேன்? கடைகளில் போய் பதினைந்து திராவிட நாடு இதழ்கள் வாங்கி நண்பர்களிடமெல்லாம் கொடுத்தேன். படிக்கச் சொன் னேன். அந்த பழக்கம்தான் இப்போதுகூட முரசொலி யில் ஏதாவது எழுதினால், வருகின்ற நண்பர்களைப் பார்த்து ‘அதைப் படித்தீர்களா?' என்று கேட்கின்ற ஆர்வம் இன் றைக்கும் கூட உண்டு. அப்படி ஆர்வத்தோடு இளமைப்பலி என்ற கட்டு ரையை எழுதி விட்டு அதை அண்ணா அவர்களும் வெளி யிட்டு விட்டு, திருவாரூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகிறார் கள். வந்த அண்ணா அவர்கள், அங்கே ஒரு வழக் கறிஞர் வீட்டின் மாடியில் தங்கியிருக்கிறார்கள். அவர் கள் அந்த இளமைப்பலி' என்கிற கட்டுரையை எழுதிய வர் யாரோ ஒரு பெரிய மனிதராக்கும், நாற்பது அல்லது ஐம்பது வயதிருக்கும் என்ற எண்ணத்தோடு, என் னுடைய உறவினர் என்பவரை டி.என். இராமன் டைய அனுப்பி என்னை அழைத்து வரச் சொன்னார். 'என்னு கட்டுரை பத்திரிகைக்கு எழுதியிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேச வேண்டும்" என்று இராமன் அவர்களுக்குச் சொல்ல; அவர்கள் என்னிடம் வந்து 'அண்ணா உன்னை அழைக்கிறார், வா!" என்று சொல்ல; நானும் கூச்சத்தோடு, சற்று அச்சத்தோடு அவர் பின்னால் சென்று அந்த வழக்கறிஞர் வீட்டு மாடியிலே நின்று கொண்டிருக்க, அண்ணா அவர்கள் அங்கிருந்த ஊஞ்ச லில் ஆடியபடி 'என் உறவினர் டி. என். இராமனைப்