பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது இங்கிலாந்தில் குடியேறி, பார்ஸி சமூகத்திற்குரிய நெறிப்படி வாணிபத்தில் ஈடுபட்டு வந்தார். அந்தக் காலத்திலும் லண்டனிலிருந்தபடி “இந்தியாவின் குரல்" (வாய்ஸ் ஆப் இந்தியா) என்னும் பெயரிலே ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை நடத்தி, இந்தியப் பெருநாட்டிலே பிரிட்டிஷ் ஆட்சியானது சமுதாயத்தின் அடித்தளத் திலுள்ள மக்களுடைய வறுமையையும் கல்வியின்மை யையும் போக்க அக்கறை காட்டாததனைக் கண்டித்து எழுதி வந்தார். | லண்டனிலே பல பகுதிகளில் கூட்டங்கள் நடத்தி, "இந்தியாவில் பிரிட்டனுடைய நியாயமற்ற ஆட்சி" என்னும் தலைப்பிலே பேசி, இந்தியருக்குப் பிரிட்டிஷ் ஆட்சி இழைத்து வரும் கொடுமைகளைப் பிரிட்டனி லுள்ள வெள்ளையர்களுக்கு உணர்த்தி வந்தார். இதற்கான ஒரே பரிகாரம் சுயராஜ்யம்'தான் என்றார். சுயராஜ்யம் என்னும் சொல்லை முதன் முதலில் லண்டனிலேயே பயன்படுத்தினார். சுமார் ஆயிரம் பக்கங்களுடைய இந்தியாவின் வறுமை" (பாவர்ட்டி ஆப் இந்தியா) என்ற மிகப் பெரிய அளவிலான ஆங்கில நூலை எழுதி, அதன் பிரதிகளைப் பல்லாயிரக் கணக்கில் பிரிட்டிஷ் மக்களிடையே பரப்பினார். இந்தியாவை ஆட்சி புரியும் வெள்ளை வர்க்கத் தின் கோட்டையிலேயே முதன் முதலில் குரல் கொடுத்த பெருமை தாதாபாய் நௌரோஜிக்கு உரியதாகும். இந்தியாவிலிருந்த தேசிய காங்கிரஸ் தலைவர் களிலே, சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாமான்ய