பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் "நான்கு வர்ணங்கள் பிறப்பினாலே அல்ல, குலத்தாலும் தொழிலாலும் உண்டாயின' என்று கீதை சொல்லுகிறது. அதன்படிப் பார்த்தால், இப்போது நமக்குள் க்ஷத்திரியர் எங்கே இருக்கிறார்கள்? நம்மைக் காப்போர் ஆங்கிலேயர்கள் ; ஹிந்துக்களுள் க்ஷத்திரி யரைக் காணோம். இந்தக் கான்பூர் பெரிய வியாபார ஸ்தலம். ஆனால், இங்குள்ள வைசியர் பிறதேசத்து வியாபாரிகளின் வசத்தில் நிற்கிறார்கள். செல்வத் தலைமை நமக்கு இல்லை, இப்போதுள்ள பிராமணர் தாமே தேசத்தின் மூளை என்று சொல்லுகிறார்கள். ஆனால், இந்த மூளை மண்ணடைந்து போய், நாம் வெளியிலிருந்து அதிக மூளை இறக்குமதி செய்யும்படி நேரிட்டிருக்கிறது. நான்கு வர்ணத்தாருக்குரிய நால்வகைத் தொழில் களும் ஹிந்துக்களல்லாத பிறர் நியமனப்படி நடக்கின்றன. நாமெல்லோரும் தொண்டர் நிலையிலே இருக்கிறோம். தேசம் கெட்ட ஸ்திதியிலே இருக்கிறது. உங்களுடம்பில் பிராமண ரத்தம் ஓடுவதாகவும் க்ஷத்திரிய ரத்தம் ஓடுவதாகவும் நீங்கள் வாயினால் சொல்லலாம். ஆனால், உங்களுடைய வாழ்க்கை அப்படி இல்லை ." (பாரதி நூல்கள் - கட்டுரைகள், “நாற்குலம்") பாரதியாரின் ஆதரவு இதற்கு மகாகவி பாரதியார் தந்துள்ள விமர்சனம் வருமாறு: