பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

"இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்" என்று விளக்கம் தந்து தமிழக மக்களை “வந்தே மரதரம்” என்று கோஷிக்கச் செய்தார். பாரதப் பெருநாடு முழுவதையும் தாய் வடிவில் கற்பனை செய்து, அவளைச் சித்திரத்தில் எழுதி, சிலை வடிவிலும் படைத்து, அவளுக்குப் பாரத மாதா என்னும் பெயர் கொடுத்து, படித்தறியாத பாமரர்களுக்கும் தேசபக்தி ஊட்டுவதற்கு வழி வகுத்தது தேசிய காங்கிரஸ்! | பம்பாயிலே பாரத மாதாவின் கோவில் ஒன்றும் அமைக்கப்பட்டுக் காந்தியடிகளால் திறந்து வைக்கப் பட்டது. அங்கு தேசப்படமே பாரத மாதாவின் திரு வுருவமாகக் காட்சியளித்தது. ஆம், அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு வழிபடுவதற்காக! திலகரின் போதனை! திலகர் பெருமான் வருணாசிரமத்தில் நம்பிக்கை யுடையவர் என்றாலும் மேல்வருணம் கீழ்வருணம் என்று ஏற்றத் தாழ்வு கற்பிப்பதை விரும்பாதவர், அத்துட னன்றி, நாட்டாலும் மொழியாலும் மதத்தாலும் அன்னியரான ஆங்கிலேயர் ஆட்சியிலே இந்துக்களின் வருணாசிரமமானது திரும்பவும் புதுப்பிக்க முடியாதபடி அழிந்தொழிந்து விட்டது என்றும் கருதினார். அதனைக் கான்பூர் சொற்பொழிவொன்றில் அவரே கூறுகிறார், கேட்போம்.