பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் - 55 ஆண்டுதோறும் கூடும் காங்கிரஸ் மகாசபைக்குப் பிரதிநிதிகளாக வரும் இஸ்லாமியர்கள் தங்கள் சமய வழிப்பட்ட பிரார்த்தனையைச் செய்வதற்காக, அவர் களுடைய பிரார்த்தனை நேரங்களிலே மகாசபையை ஒத்தி வைப்பது வழக்கமாகி வந்தது. இந்து - முஸ்லிம்களிடையிலே, மேல் மட்டத்தில் - அதாவது, படித்தவர்களிடையில் உருவாகி வந்த ஒற்றுமையானது, கீழ் மட்டத்திலுள்ள சாமான்ய மக்களுக்கும் வழி காட்டுவதாக இருந்தது. பாரதியாரின் பாட்டு இந்நேரத்திலேதான், 'பாரத சமுதாயம் வாழ்கவே' என்னும் தேசிய ஒருமைப்பாட்டுக் கீதத்தை மகாகவி பாரதியார் படைத்தார். இதற்கு முன்பே, "வந்தே மாதரம் என்போம்" என்று தொடங்கும் தேசியப் பாடலையும் புனைந்து மக்களுக்கு அளித்தார். இதற்கும் முன்பே, வங்க மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி புனைந்த "வந்தே மாதரம்" என்று தொடங்கும் பாடலானது இந்தியாவின் தேசிய கீதமாக 1905-ல் கூடிய காங்கிரஸ் மகாசபையால் அங்கீகரிக்கப்பட்டது. அதைத் தமிழிலே பாரதியார் மொழி பெயர்த்தாரென்றாலும், அதிலே அவருக்கு மனநிறைவு கிடைக்கவில்லை . அதனால், "வந்தே மாதரம் என்போம்" என்று தொடங்கும் பாடல் ஒன்றைத் தமிழிலேயே படைத்தளித்தார். அதிலே, " எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மீல் யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்