பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது சுப்பிரமணிய ஐயர், சுப்பிரமணிய பாரதி, சி. விசயராக வாச்சாரி, சி.பி. ராமசாமி ஐயர், வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, சிவசாமி ஐயர், கஸ்தூரிரங்க ஐயங்கார் ஆகியோர் 'முக்கியமானவர்களாவர். ராஜாஜி. திலகர் சகாப்தத்தில் தோன்றிக் காந்தி சகாப்தத்தில் வளர்ந்த வராவார். தமிழகம் கண்ட தலைவர்கள் நாளடைவில் பிறசாதிகளிலிருந்தும் மதங்களி லிருந்தும் தலைவர்கள் தோன்றி தமிழ்நாடு காங்கிரசிலே முன்னணியில் நின்றனர். அவர்கள் குத்தி கேசவப் பிள்ளை , வ. உ. சிதம்பரனார், சக்கரை செட்டியார், டாக்டர் பி. வரதராசுலு நாயுடு, யாகூப் ஹாஸன், ஈ.வே. ராமசாமி, திரு.வி.கல்யாணசுந்தரனார், தோழர் சிங்கார வேலர் ஆகியோருள்ளிட்ட பலர் தமிழ்நாடு காங்கிரசிலே முன்னணித் தலைவர்களாயினர். இதனைச் சமுதாயப் புரட்சி என்றும் சொல்லலாம். இதற்காக, வகுப்பு ரீதியில் போட்டியோ, போராட்டமோ தமிழ் நாட்டில் நிகழ்ந்த தில்லை . இந்திய தேசிய அரசியலிலே புரட்சி மனப் பான்மை உருவானதன் விளைவாகவே இந்தச் சமுதாய மாறுதல் ஏற்பட்டது. இதனையும் தேசியத்தால் விளைந்த சமுதாயச் சீர்திருத்தம் எனலாம். இந்திய தேசியம் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகளே தேச விடுதலைப் போராட்டமும் சமுதாய சீர்திருத்தப் புரட்சியும். இது, தேசிய காங்கிரசின் ஒரு நூற்றாண்டுக் கால வரலாறு காட்டும் உண்மையாகும்.