பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் நிர்வாகப் பொறுப்புகளுக்கு சாதாரண உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக நெறியும் நடைமுறைக்கு வந்தது. 1921-ல் நாட்டில் நடைமுறைக்கு வந்த மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தமானது சொத்து வரியும் வருமான வரியும் செலுத்துபவர்களுக்கு மட்டுமே மாநில மத்திய சட்ட மன்றங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந் தெடுக்க வாக்குரிமையளித்தது. மக்களின் அமைப்பான காங்கிரசோ, 21 வயதான - நான்கணா ஆண்டுச் சந்தா செலுத்திய - இந்தியர் அனைவருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வாக்குரிமையளித்தது. இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்புக்கு, வெள்ளை - பச்சை - சிவப்பு ஆகிய முந்நிறங்களையும், நடுவிடத்தே கைராட்டையையும் கொண்ட கொடி ஒன்றையும் முதன் முதலாக நாகபுரி காங்கிரஸ் அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்டது. இதற்கு முன்பும் மூவர்ணக் கொடி ஒன்றை காங்கிரஸ்காரர்கள் பயன் படுத்தினரென்றாலும் அது அதிகாரபூர்வமாக அங்கீ கரிக்கப்பட்டது இப்போது தான். 1906 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் கூடிய வருடாந்தரப் பேரவையிலேயே பங்கிம் சந்திரரின் "வந்தே மாதரம்" என்று தொடங்கும் பாடலைத் தேசிய கீதம்' ஆக ஏற்றுக் கொண்டதை இங்கு நினைவில் கொள்வோமாக! * * இந்திய சமுதாயத்தினர் அனைவருக்கும் ஒரே அமைப்பு - அது, இந்திய தேசியக் காங்கிரஸ்