பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள் 59

இரண்டாம் வகை: முழங்காலிட்டு, உடலை

விறைப்பாக, தலையை நிமிர்த்தி வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து.

தலைக்கு மேலே இரண்டு கைகளையும், முழங்கை களை மடக்கிக் கொண்டு வந்து உள்ளங்கைகள் மேற்புறம் (Upward) பார்ப்பது போல வைத்து, கைகளின் விரல்கள் அனைத்தும் தலைக்கு மேலேயே இருப்பது போல் வைத்து செய்யவும்.

குறிப்பு: உடல் விறைப்பாக இருக்க வேண்டும். கைவிரல்கள் தலையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். கைகள் பக்கவாட்டிலிருந்து தலைக்கு மேற் புறமாக வந்திருக்க வேண்டும்.

9. L suiq saq Lusróél (Baithak with L Form)

பெயர் விளக்கம்

இந்த பஸ்கியை செய்திருக்கும் பொழுது, இடது 85ҒТ65)6%)

மடக்கியிருக்கும் நிலையும், வலது கையானது நெஞ்சுக்கு முன் வைத்திருக்கின்ற நிலையும், வலது гн, II бU) 6\) மடித்துப் பின்புறம் நீட்டியிருக்கும் நிலையும் ட வடிவில் இருப்பதால், இதற்கு ட வடிவுப் பஸ்கி என்ற பெயர் வந்திருக்கிறது.

தொடக்க நிலை: முதலில் மண்டியிட்டுத் தரையில் இருக்க

வேண்டும்.