உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

(எல்லாப் பிரிவுகளும்) ஜைனம் (எல்லாப் பிரிவுகளும்) சாரு வாகம் (லோகாயதம்) ஆகியவை. பிற்காலப் பிரிவுகளான அத்வைதம், விசிஷ்டாத்துவைதம், மாத்வம், சைவ சித்தாந்தம், நியாய வைசேஷிக தத்துவப் போக்கையும், பிரம்மஸூத்ரத்திற்கு விளக்கவுரையாகவும், ஆகமங்களின் தொடர்ச்சியாகவும் எழுந்தது. பண்டைய இந்தியத் தத்துவங்கள் வேதச் சார்புடையவை, வேத எதிர்ப்புடையவை எனப்பிரிக்கப்படும். வேத சார்புடையவைக் கூட ஒப்புக்குத்தான் வேதங்களை ஒப்புக் கொள்கின்றன. முக்கியமான கடைப்பிடிகளில் அவை வேதத்தினின்றும் வேறுபடுகின்றன.

ஆயினும் கடவுள் என்ற பிரச்சினை இவற்றுள் வேதாந்தமும், நியாய-வைஷிகமும்தான் தெளிவாகக் கடவுளை ஒப்புக் கொள்ளுகின்றன. பிற முக்கியமான இந்தியத் தத்துவங்கள் எல்லாம் கடவுளை மறுக்கின்றன. ஆறு சமயம் என்று உபசார வழக்காகக் கூறப்படும் ஆறு தத்துவங்களில் நான்கு, நாத்திகப் போக்குடையவை. இரண்டே இரண்டுதான் ஆத்திக நம்பிக்கையுடையவை. இவ்வாறு இருக்கும் பொழுது இந்திய தத்துவங்கள் எல்லாம் கடவுள் தத்துவத்தை அடிப்படையாக உடையவை என்று கூறுவது அறிந்தே பொய் சொல்லி ஏமாற்றுவதாகும். சாமானிய சாலம் ஆகும்.


3. கடவுள் கருத்தின் துவக்கமும் நாத்திகத்தின் தோற்றமும்

“வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றிவிட்டது” என்று கார்பே என்னும் இந்திய ஆய்வாளர் கூறுகிறார், வேதகாலத்தில் ‘சர்வ வல்லமையுள்ள கடவுள்’ என்ற கருத்தே தோன்றவில்லை. “கண்ணால் காணாததை நம்பாதே” என்பது போன்ற கருத்துக்கள் தோன்றி

20