பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆராய்ச்சியையும் பிரிக்கிற எல்லைக்கோடாகக் காணப்படுகிறது. இவை முரண்பட்டு, முரண்பாடுகள் வளர்ச்சியடைந்து தற்காலத்தில் விஞ்ஞானம், மத நம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. இதனை பெட்ராண்டு ரஸ்ஸல் என்னும் சிந்தனையாளர் நிலைத்த போராட்டம் (Pitched battle) என்று வருணிக்கிறார்.

மதங்களின் மிக முக்கியமான நம்பிக்கை, “இப்பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள இயற்கைக்கு அதீதமான சக்தி ஒன்றுதான் இவ்வுலகைப் படைத்தது” என்பதே. அச்சக்தியைத்தான் ‘கடவுள்’ என்று பக்திமான்கள் அழைக்கிறார்கள். இக்கடவுளை நம்பிக்கையால் மட்டுமே அறிய முடியும் என்று மதவாதிகள் கூறுகிறார்கள். சில தீர்க்கதரிசிகள் மூலம் கடவுள் தனது நீதியை வெளிப்படுத்துவார். இந்தியாவில் கடவுளே அவதாரம் எடுத்து தமது நீதியை நிலைநாட்டுவார் என்று நம்புகிறார்கள். பைபிளில் வருங்காலத்தில் நிகழப்போகும் நிகழ்ச்சிகளை தேவ தூதர்கள் அர்ச். ஜானுக்கு வெளிப்படுத்தியதாக “வெளிப்படுத்தின விசேஷம்” (Revelation)[1] என்று ஓர் அத்தியாயம் உள்ளது. அதில் தேவ தூதர்கள் நடத்தப் போகிற சம்பவங்களை திவ்ய வாசகனான யோவானுக்கு அறிவிக்கிறார்கள். சைவத்தில் அடியார்களுக்குச் சிவபெருமான் காட்சி கொடுத்தோ அல்லது கனவில் தோன்றியோ தம் விருப்பங்களைத் தெரியப்படுத்துவார் (பெரிய புராணம்). தற்காலக் கிராமத் தெய்வங்கள் கூட ஆராதனை கொண்டு ஆடுபவர்கள் மூலமாக தம் விருப்பங்களைத் தெரியப்படுத்துவதாக நம்பிக்கையுள்ளது. இவர்களுக்கு 'சாமியாடி, கோமரம்' என்ற பெயர்கள் உண்டு. இது போலவே பகவதி மனம் தெரிந்து சொல்லுகிற பூசாரிக்கு 'வெளிச்சப்பாடு' என்று பெயர்.

இவர்களை J.G ஃப்ரேஸர் என்னும் பண்பாட்டு மானிடவியல் அறிஞர் (Temporary Gods) ‘தாற்காலிக்க

  1. II யோவான்-பக். 333, இந்திய வேதாகமச் சங்க வெளியீடு. பரிசுத்த வேதாகமம்.
25