பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

(பெளதீகம்) என்னும் விஞ்ஞானத்தின் விதிகளை அறிந்து இப்பொருள்கள் இருக்கும் இடத்தையும், அளவையும் தெளிவாக அறியலாம்.

வெடி அதிர்வுகளே, அண்மைக் காலத்தில் உலோக தாதுக்கள், நிலக்கரி, மண்ணெண்ணெய் போன்ற பொருள்களின் இருப்பிடத்தை அறியப் பயன்பட்டது. தற்போது பல வகைக் கதிர்களின் (Rays) பிரதிபலிப்பினால் பூமியினடியில் உள்ள பொருள்களை அறிய முடிகிறது. ஓரிரு உதாரணங்களே நான் கொடுத்துள்ளேன். விஞ்ஞான-தொழில் நுணுக்கப் புரட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான சான்றுகளை அடுக்கிக்கூற முடியும். மனிதன், இயற்கை விதிகளை அறிந்து கொள்வதால், இயற்கையை தனது நலனுக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளுகிறான் என்ற உண்மையை விளக்கப் பல நூற்றுக்கணக்கான நூல்களே வெளி வந்துள்ளன.

இவ்விஞ்ஞானிகள் இயற்கையை அறியப் பயனபடுத்தும், அறிதல் முறை, நேர்காணல், சோதனை, தொடர் சிந்தனை, கருதுகோள் அமைப்பு, பின்னும் நிரூபணச் சோதனை ஆகிய சிந்தனைப் பகுதிகள் அடங்கிய விஞ்ஞான ஆய்வு முறையாகும். இங்கு நம்பிக்கைகள், கடவுளைக் கண்டவர்கள் கூறியது, ஆப்த வாக்கு (பெரியோர் கூற்று) என்பதற்கெல்லாம் இடம் இல்லை.

இவ்விரண்டு போக்குகளுக்கும் பண்டைக்கால முதலே போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியத் தத்துவ சிந்தனையில் ‘கடவுட் கொள்கை’ ‘சுபாவக் கொள்கை’ இரண்டிற்கும் நடைபெற்றுள்ள போராட்டங்களை இங்கு காண்டோம்.

சுபாவவாதம், விஞ்ஞானத்திற்கு அடிப்படைக் கருதுகோள். இது ஈஸ்வரவாதத்தின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் முரண்பட்டு மோதிக் கொள்ளுகிறது. இதனை இந்திய தத்துவ வரலாற்றில் ஈஸ்வர வாதத்திற்கும் சுபாவ வாதத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டமாகக் காணலாம். ஸ்வேதாஸ்வதார உபநிஷதம் என்னும்

28