அறிஞர் அண்ணா
9
நாட்டிலே பேசப்பட்டது ? ஈராயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன்னாலே தமிழ் வாணிபன் – தமிழ் வணிகன், ரோம் நாட்டுக்கடை வீதியிலே பேசினானே! ஈராயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன்னாலே யவனத்திலல்லவா சென்று வியாபாரம் செய்தான்! ஈராயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன்னாலே உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு எங்கள் தமிழ்மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்ததே,
“ஈராயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன்னாலே அறவழியிலே எங்கள் இன மக்களை இழுத்துச் செல்வதற்கு எங்கள் தமிழ் மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. பாடி வீடானாலும் சரி, பள்ளியறையானாலும் சரி, சாலையானாலும் சரி, சோலையானாலும் சரி, களமானாலும் சரி எங்கேயும் பயன்பட்டு வந்த இந்தத் தமிழ்மொழி பயன்படாது என்று சொல்லுகின்றவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? அவர்கள் தமிழ் மொழியறியாத காரணத்தால் அப்படி பேசுகிறார்கள் என்று மன்னித்து விடலாம் என்றாலும், அவர்களே சிற்சில வேளைகளிலே நம்முடைய முகவாய்க்கட்டையைத் தடவிச்சொல்லுகின்றார்கள்.
“தம்பி, தம்பி! தமிழ்மொழியை இகழ்வதாகக் கருதிக்கொள்ளாதே. அது மிக நல்ல மொழி, அழகான மொழி, எனக்குப் பேசத் தெரியாதே தவிர, பேசுவதைக் கேட்டிருக்கிறேன் மிக அழகாக இருக்கின்றது” என்று நம்மிடத்திலே சொல்லிவிட்டு, எங்களுடைய மொழி சிலாக்கியமானது என்று சொல்லவில்லை. எங்களுடைய மொழி இலக்கிய வளமில்லாத மொழிதான். நீங்கள் விரும்பினால் அதை 6 மாதக் காலத்திலே கற்றுக் கொள்ளலாம், ஒராண்டுக் காலத்திலே கற்றுக் கொள்ளலாம். என்றாலும் தமிழ் ஒரு புறத்திலே இருக்கட்டும். இந்தியையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்திக்கு ஆதிக்கம் தாருங்கள், என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றார்கள்.
சிலப்பதிகாரக் காலத்திலாவது, கண்ணகி அளிக்க முடியாத சுகத்தை மாதவி அளித்தாள் என்பதற்காக வழி